வெற்றி வேல், வீர வேல்; நல்லா இருக்கீங்களா என்று தமிழில் பேசி மோடி உரை துவக்கம்..!

“நல்லா இருக்கீங்களா, மதுரை வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்று தமிழில் பேசி தனது உரையை மோடி துவங்கினார்.

பாஜக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய பிரதமர் மோடி வெற்றி வேல், வீர வேல் என்று தமிழில் பேசிய பின்னர், “நல்லா இருக்கீங்களா, மதுரை வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்று தமிழில் பேசி தனது உரையை துவங்கினார்.

தமிழ் கலாச்சாரத்தின் மையமாக மதுரை திகழ்கிறது. உலகத்தின் தொன்மை மொழியான தமிழை, சங்கம் வைத்து வளர்த்தது மதுரை. மறைந்த தென் மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன்.மதுரை மண் காந்தியிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மண். மதுரை மக்களுக்கு பரந்த இதயம் கொண்டவர்கள்.

நூற்றாண்டுகளுக்கு முன் வந்த சவுராஷ்டிராக்கள் இங்கு வாழ்கின்றனர். ஒரே நாடு பெருமைமிகு நாடு என்பதை வெளிப்படுத்துவதாக மதுரை உள்ளது. மதுரை வீரன் என்ற பெயரில் எம்ஜிஆர் நடித்த படத்தை யாராவது மறக்க முடியுமா..? மதுரை- கொல்லம் பொருளாதார வழித்தடம் அமைந்த பிறகு தொழில்துறை மேம்படும் என்று மோடி உறுதியளித்தார்.

தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை கொண்டு வர மத்திய அரசு திட்டம். சாலை போக்குவரத்து, ரயில்வே கட்டுமானம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

author avatar
murugan