இது பாஜக-விற்கு கை வந்த கலை…! வருமான வரித்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்த நாராயணசாமி …!

வருமான வரித்துறை சோதனைக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

வருமான வரித்துறையினர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு திமுக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுகவும், பாஜகவும் தோல்வி பயத்தால் வருமான வரித்துறையை ஏவி விட்டு, மு.க.ஸ்டாலினின் குடும்பத்திற்கு களங்கம் விளைவிக்க வேண்டும், மக்களை மத்தியில் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டும் என்றும் தான் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பாஜக என் அளவில், எதிர்கட்சிகளை திட்டமிட்டு பழிவாங்குகிறது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். திமுகவை சேர்ந்த அரசியல் பிரபலங்களின் வீடுகளில் சோதனை செகிறார்கள்.  ஆனால், அதிமுக மற்றும் பாஜக-வை சேர்ந்த கட்சியினரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளவில்லை. இது பாரதிய ஜனதாவிற்கு கை வந்த கலை என தெரிவித்துள்ளார்.