கல்வி உதவித்தொகை தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

கல்வி உதவித்தொகை தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், உயர்கல்வி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையில் மத்திய அரசு 60% பங்களிப்பை வழங்க வேண்டும்.கல்வி உதவித்தொகை திட்டத்தில் தமிழக அரசு ரூ. 2110 கோடி செலவாக வாய்ப்புள்ளது.

இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடமிருந்து 584 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு பிறகான கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும். மேலும், பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறைக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து 60 :40 என்ற வீதத்தில் மத்திய அரசு கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube