விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: காலை 11 மணி நிலவரம் என்ன ?

விக்கிரவாண்டியில் காலை 11 மணி நிலவரப்படி 32.54% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது .காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.வாக்காளர்கள் தங்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 32.54% வாக்குகள் பதிவாகி உள்ளது.

இடைத்தேர்தல் காலை 9 மணி வரை பதிவான வாக்கு பதிவு நிலவரம்..!

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இடைதேர்தல் நடைபெற்று வருகிறது.அதன் படி விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டியில் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குகள் பதிவாகி உள்ளது. நாங்குநேரி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 06.58% வாக்குகள் பதிவாகி உள்ளது. புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 9.66% வாக்குகள் … Read more

நாங்குநேரி : கொட்டும் மழையிலும் வாக்கு பதிவு செய்யும் பொதுமக்கள் !

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் இன்று (21-ஆம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி வி.நாராயணன்(நாங்குநேரி) மற்றும் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனும்(விக்கிரவாண்டி), தி.மு.க சார்பில் நா.புகழேந்தி(விக்கிரவாண்டி) மற்றும் ரூபி மனோகரன்(நாங்குநேரி), சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றனர். கடந்த 19ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. இந்த பிரசாத்தில் பன்னீர்செல்வம், பழனிச்சாமி, ஸ்டாலின் மற்றும் சீமான் பங்கேற்று நங்களது வேட்பாளர்களை அதரித்து வந்தனர். தற்போது அனைத்து தொகுதியிலும் … Read more

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் இன்று (21-ஆம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. விக்கிரவாண்டியில் திமுக சார்பில் புகழேந்தியும்,  அதிமுக சார்பில் முத்தமிழ் செல்வனும்,  நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் போட்டியிடுகின்றனர்.நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன்,  நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ நாராயணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில்  காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரும்,  என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்   புவனேஸ்வரனும், நாம் தமிழர் … Read more

ஓய்ந்தது பரப்புரை ! நாளை மறுநாள் இடைத்தேர்தல்

நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதிகளில் பரப்புரை ஓய்ந்துள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் நாளை மறுநாள் (21-ஆம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக கடந்த 2 வாரங்களாக விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதிகளில் தீவிரமாக பிரசாரம் நடைபெற்று வந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிரமாக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.தற்போது பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்,இன்று … Read more

நாளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

நாளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு  அனுப்பி வைக்கப்படும். என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.நாளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு  அனுப்பி வைக்கப்படும். சுமூகமாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.நாங்குநேரியில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான மாவட்ட ஆட்சியரின் அறிக்கை தலைமை … Read more

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிரமாக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.மேலும் வெளி நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி … Read more

ஜெயலலிதா உயிரிழப்புக்கு ப.சிதம்பரமும் ஒரு காரணம் -முதலமைச்சர் பழனிசாமி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாங்குநேரி முன்னீர்பள்ளத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், வாக்களித்த மக்களை நினைக்காமல், பதவிக்கு ஆசைப்பட்டு மக்களுக்கு துரோகம் செய்ததால் இந்த தேர்தலை சந்திக்கிறோம்.காங்கிரஸ் கட்சியால்தான் இந்த தேர்தல் நடக்கிறது, தேர்தலில் காங்கிரஸ்  கட்சிக்கு தக்க பாடம் புகட்டவேண்டும். ஜெயலலிதா உயிரிழப்புக்கு ப.சிதம்பரமும் ஒரு காரணம், ஜெயலலிதா ஆன்மா சும்மாவிடாததால் இன்று அவர் சிறையில் உள்ளார்.ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக … Read more

தொகுதியை விட்டு வெளி நபர்கள் வெளியேற வேண்டும்-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியை விட்டு வெளி நபர்கள் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது. வெளி நபர்கள் தொகுதியை விட்டு … Read more

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் அக்டோபர் 21 -ஆம் தேதி பொதுவிடுமுறை-ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசாணை

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21 -ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் அனைத்தும் நிறைவுபெற்று பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21 -ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 21-ஆம் தேதி அரசு, தனியார் அலுவலக பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.