7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் கனவை நினைவாக்கிய முதல்வருக்கு நன்றி!

7.5% உள் இட ஒதுக்கீடுமூலம் மருத்துவ படிப்பில் இடம் பெற்ற சிவகங்கையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். மருத்துவ கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளியில் பயின்று வரக்கூடிய மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு தருவதற்கான சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தா நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் தற்பொழுது சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் … Read more

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது? வெளியாகிய புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது, விடுதிகள் செயல்படவும் அனுமதி கொடுக்கபடுவதாகவும் தமிழக முதல்வரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அப்போது முதலே தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரம் கருதி ஒவ்வொரு தளர்வுகளாக தமிழக அரசு கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஊரடங்கும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு உத்தரவு வெளியாகியுள்ளதுடன், கல்லூரிகளில் செயல்படவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது … Read more

எந்த முடிவுகளையும் முதல்வர் தான் அறிவிப்பார் – அமைச்சர் செங்கோட்டையன்!

பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்த முடிவுகளையும் முதல்வர் தான் அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் தனது தீவிரத்தை குறைத்துக் கொள்ளாமல் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. சில இடங்களில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் மார்ச் மாதம் முதலே தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததால், பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. ஆந்திராவில் வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் அரை … Read more

#அரசியலில் பஸ்வான் எனும் நான்-இறப்பை சரித்தரமாக்கி காட்டியவர்- EPS புகழாரம்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் மறைவு மத்தியில் மட்டுமின்றி அனைவர் இடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்புலமின்றி அரசியலில் வேர்விட்டு நிழல்கொடுத்த ஆலமரம் இன்று சரிந்துள்ளது. மத்திய அமைச்சர் பஸ்வானின் மறைவுக்கு தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:- பிறப்பு சம்பவமாக இருக்கலாம் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்புடையவர் பஸ்வான். நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் … Read more

விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு ! குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர்  பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மை காலமாக தமிழகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் கடந்த 20-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாயு தாக்கி லட்சுமணன் மற்றும் சுனில்  ஆகிய இருவர்  … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.!

நாளை கொண்டாணப்படும் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு உட்பட சிசிடிவி கேமரா மூலம் வாகன தணிக்கை, ரோந்து பணிகள் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நாளை 74 வது சுதந்திர தின விழாவை கொண்டாட்டத்தை ஒட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தேசிய கொடி ஏற்றவுள்ளார். மேலும் கொரோனா அச்சம் காரணமாக பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் யாரும் … Read more

சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது -முதலமைச்சர் பழனிசாமி

சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு சொத்து உரிமையில் சம பங்கு வழங்குவது தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு  வந்த நிலையில், 2005 இந்து சொத்தூரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், ஆண்பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண்பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் … Read more

சுவர் இடிந்து விழுந்து பலியான பிரதீப் அஸ்வின், குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் பழனிசாமி.!

கன்னியாகுமரியில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து பலியான பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீண்டகரை-பி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கடல்சீற்றம் நடந்தது. அப்போது கடல்நீர் ஊருக்குள் புகுந்த போது, அப்பகுதியில் உள்ள மரியதாஸ் என்பவருடன் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த மரியதாஸின் மகன் பிரதீப் அஸ்வின் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். … Read more

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்-முதலமைச்சர் பழனிசாமி

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர். ராமர் கோவிலுக்கு  பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,  அயோத்தியில் ராமர் கோவில் … Read more

முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு – அரசியல் கட்சியினர் கருத்து

முதலமைச்சரின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக அரசு  மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார் .தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் … Read more