மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்!

Hardik Pandya

2024ம் ஆண்டுக்கான 17வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024ம் ஆண்டு சீசனுக்காக வரும் 19-ம் தேதி மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியிலிருந்து வீரர்களை விடுவித்தல், வீரர்களை பரிமாற்றம் செய்தல் போன்றவை அணிக்குள்ளாகவே நடைபெற்றது. அப்போது, மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விடுவித்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை, மீண்டும் ட்ரேடிங் மூலம் … Read more

ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 10 பில்லியனாக உயர்வு… ஒவ்வொரு அணியின் பிராண்ட் மதிப்பு எவ்வளவு? முதல் 10 அணிகள்…

IPL brand value

அடுத்தாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நடைபெற உள்ளது. இதற்காக 10 அணிகளின் உரிமையாளர்களும் அணி வீரர்களை தேர்வு செய்வதில் மும்மரம் காட்டி வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி ஐபிஎஸ் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக 333 பேர் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், 2023 சீசனுக்குப் பிறகு ஐபிஎல் பிராண்ட் … Read more

#RRvsMI: ஜோஸ் பட்லர் அரைசதம்.. மும்பை அணிக்கு 159 ரன்கள் இலக்கு!

இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு 159 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். ஐபிஎல் தொடரின் இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான 44-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜோஸ் பட்லரும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். இதில் சிறப்பாக … Read more

ஐபிஎல் 2022 இல் ஒரு இன்னிங்ஸில் நான்கு சிக்ஸர்களை அடித்த இளம் கிரிக்கெட் வீரர் பேபி ஏபி..!

நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் பேபி ஏபி என அழைக்கப்படும் டிவால்ட் ப்ரீவிஸ் அவர்கள் தனது அரை சதத்தை தவறவிட்டார். இருந்தாலும், பிபிகேஎஸ் லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹருக்கு எதிராக விளையாடிய பேபி ஏபி, ஒரு இன்னிங்சில் மொத்தம் நான்கு சிக்சர்களை விளாசினார். அதில் ஒரு சிக்ஸர் 112 நீளம் கொண்டது.  இது தான் இந்த வருடத்துக்கான ஐபிஎல்லில் … Read more

#IPL2022: 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் எடுத்த மும்பை அணி..கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் இலக்கு..!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி, 161 ரன்கள் குவித்துள்ளது. 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைப்பெற்று வரும் 17-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை … Read more

#IPL2022: டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு தேர்வு..!

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் … Read more

எனது ஐபிஎல் பணத்தை எடுத்து பெற்றோருக்காக இதை செய்ய போகிறேன் – மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மா..!

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 15 ஆவது சீசன் 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரராக இளம் வீரர் திலக் வர்மா அவர்கள் விளையாடி வருகிறார். தனது பேட்டிங் மூலமாக பலரையும் கவர்ந்துள்ள திலக் அட்டகாசமாக தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்பொழுதும் இவர் தனது ஐபிஎல் சம்பளத்தில் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து பேசியுள்ளார். முன்னதாக பிப்ரவரி மாதம் நடந்த ஐபிஎல் 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் 1.7 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக் … Read more

#IPL 2021: 90 ரன்களில் சுருட்டி ராஜஸ்தானை வெளுத்துக் கட்டிய மும்பை பவுலர்ஸ்!

ஐபிஎல் தொடரின் மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் ராஜஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியின் 51-வது லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் அணி மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் … Read more

#MIvDC: டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு..!

ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. டெல்லி அணி: பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் ஸ்மித், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் … Read more

#RCB v MI: விராட், மேக்ஸ்வெல் அரைசதம்.. மும்பை வெற்றி பெற 166 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் விராட் கோலி அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 165 ரன்கள் குவிப்பு. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் எதிர்பார்த்ததும், எதிர்பார்காததும் நிகழ்ந்து வருகிறது. இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற 38வது போட்டியில் சென்னை vs கொல்கத்தா இடையேயான போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, இன்றைய தினத்தின் மற்றோரு அனல் பறக்கும் 39வது லீக் போட்டியான ராயல் … Read more