ஐபிஎல் 2022 இல் ஒரு இன்னிங்ஸில் நான்கு சிக்ஸர்களை அடித்த இளம் கிரிக்கெட் வீரர் பேபி ஏபி..!

நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் பேபி ஏபி என அழைக்கப்படும் டிவால்ட் ப்ரீவிஸ் அவர்கள் தனது அரை சதத்தை தவறவிட்டார்.

இருந்தாலும், பிபிகேஎஸ் லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹருக்கு எதிராக விளையாடிய பேபி ஏபி, ஒரு இன்னிங்சில் மொத்தம் நான்கு சிக்சர்களை விளாசினார். அதில் ஒரு சிக்ஸர் 112 நீளம் கொண்டது.  இது தான் இந்த வருடத்துக்கான ஐபிஎல்லில் மிக நீளமான சிக்ஸர். 18 வயதில் பேபி ஏபி அசத்தலாக விளையாடியுள்ளது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

author avatar
Rebekal