#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்!

34-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் 2021-ன் 14 சீசனின் இன்றைய 34-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. மும்பை மற்றும் சென்னை போட்டியில் … Read more

IPL 2021, KKR vs MI:மும்பை அணியை வீழ்த்துமா? கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…!

ஐபிஎல் (KKR vs MI): இன்று நடைபெறும் 34 லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 14 சீசனின் 34 வது போட்டியில் ரோகித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் மற்றும் இயோன் மோர்கனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது,இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை, எம்ஐ மற்றும் கேகேஆர் மொத்தம் 28 முறை விளையாடியுள்ளன.இதில் … Read more

#CSKvsMI: ருதுராஜ் அதிரடி… மும்பைக்கு 157 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. துபாயில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக டுப்ளெஸ்ஸி, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆனால் முதல் ஓவரிலேயே … Read more

ஹிட்மேனை பின்னுக்கு தள்ளிய டேவிட் வார்னர்..!!

ஐபிஎல் போட்டிகளில் அதிகம் ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் டேவிட் வார்னர் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் … Read more

#ஐபிஎல் 2021:விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோஹித் ஷர்மாவின் ஷூக்கள்..!வைரலாகும் புகைப்படம் ..!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வித்தியாசமான லோகோவுடன் அணிந்திருந்த ஷூக்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகின்றன. இந்திய அணியின் பேட்டிங் நட்சத்திரமான ரோஹித் சர்மா, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒருபுறம்,மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கவனம் தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெறுவதாக இருந்தாலும், அவ்வப்போது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் உள்ளது. ஒற்றைக் … Read more

MI vs RCB : டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச தேர்வு..!!

14 வது சீசா ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். விளையாடும் வீரர்களின் விவரம் :  மும்பை இந்தியன்ஸ்:  ரோஹித் சர்மா , சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லின், கீரோன் பொல்லார்ட், ஹார்டிக் பாண்டியா, இஷான் கிஷன், க்ருனல் பாண்டியா, மார்கோ … Read more

“தமிழில் ஒரு ட்வீட்டாவது போடுவீங்களா?”-ரசிகரின் கோரிக்கையை நிறைவேற்றிய மும்பை இந்தியன்ஸ்!

தமிழில் ஒரு ட்வீட்டாவது போடுவீங்களா? என மும்பை இந்தியன்ஸ் ரசிகர் செய்த கமெண்ட்டிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி, “கண்டிப்பா மச்சான்” என பதிலளித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நெருங்கிவரும் நிலையில், தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், 57 வீரர்களை ரூ.143.69 கோடிக்கு ஏலத்தில் எடுத்தன. அதனைதொடர்ந்து அணியினர், தங்களின் வீரர்களை அறிமுகப்படுத்தி … Read more

கோலியை சாய்த்து பும்ரா புதிய சாதனை!

ஐபிஎல் போட்டியில் 100 விக்கெட் வீழ்த்தி பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல்2020 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது. நேற்று மும்பை மற்று பெங்களுருக்கு எதிரான ஆட்டம் நடைபெற்றது.அனல் பறந்த ஆட்டத்தில் கேப்டன் கோலியின் விக்கெட்டை பும்ரா அசத்தலாக வீழ்த்தியதன் மூலமாக 100 விக்கெட் எடுத்த 16வது வீரர் என்ற சாதனை நிகழ்த்தி உள்ளார். ஐபிஎல் போட்டியில் கோலியை பும்ரா வீழ்த்துவது இது முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 6வது … Read more

புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை…!

நேற்று மும்பை அணி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் 27 – வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து. அடுத்ததாக 163 என்ற இலக்குடன் … Read more

MIvRR யாருக்கு?? ஹாட்ரிக் வெற்றி..ஹாட்ரிக் தோல்வி..!

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் வேட்டையோடு மும்பையும்,ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க ராஜஸ்தானும் இன்று பலபரீச்சை நடத்துகிறது. ஐபிஎல் களத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் 21 ஆட்டங்களில் சந்தித்துள்ளது.இதில் இரு அணிகளிலும் 10 ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்தியுள்ளது.கடையாக மோதிய 5 ஆட்டங்களில் ராஜஸ்தான் 4 வெற்றிகளை ரூசித்துள்ளது.மும்பைக்கு ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட்,போல்ட் போன்ற வீரர்கள் தூண்களாக உள்ளனர்.இதே போல ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், பட்லர், ஆர்ச்சர் போன்ற வீரர்கள் நம்பிக்கை அளித்து வருவது அணிக்கு பலமே.நடப்பு … Read more