#ஐபிஎல் 2021:விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோஹித் ஷர்மாவின் ஷூக்கள்..!வைரலாகும் புகைப்படம் ..!

#ஐபிஎல் 2021:விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோஹித் ஷர்மாவின் ஷூக்கள்..!வைரலாகும் புகைப்படம் ..!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வித்தியாசமான லோகோவுடன் அணிந்திருந்த ஷூக்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகின்றன.

இந்திய அணியின் பேட்டிங் நட்சத்திரமான ரோஹித் சர்மா, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஒருபுறம்,மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கவனம் தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெறுவதாக இருந்தாலும், அவ்வப்போது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் உள்ளது.

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் அல்லது இந்திய காண்டாமிருகத்தை பாதுகாப்பதற்கான காரணத்தை ரோஹித் ஷர்மா நீண்ட காலமாக ஆதரித்து வருகிறார்.இதனால்,பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2021 இன் போட்டியில் முதல் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரோஹித், ‘சேவ் தி ரைனோஸ்(காண்டாமிருகத்தை பாதுகாப்போம்)’ என்ற வசனம் அடங்கிய ஷூக்களை அணிந்திருந்தார்.

இதனை தொடர்ந்து,சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய் கிழமையன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போது ‘பிளாஸ்டிக் ப்ரீ ஓசென்'(பிளாஸ்டிக் இல்லாத பெருங்கடல்) என்ற வசனம் அடங்கிய ஷூக்களை அணிந்து கடல் பகுதிகளில் பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து,ரோஹித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகள்,மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினையாக மாறியுள்ளது.எனவே,கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி நமது பெருங்கடல்களை மீண்டும் தூய்மையானதாக மாற்றுவோம். ஆனால்,என் ஒருவனால் மட்டும் இதை செய்ய முடியாது,உங்கள் அனைவரின் பங்களிப்பும் வேண்டும்”,என்று கூறியுள்ளார்.

 

Join our channel google news Youtube