#IPL2022: 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் எடுத்த மும்பை அணி..கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் இலக்கு..!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி, 161 ரன்கள் குவித்துள்ளது. 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது.

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைப்பெற்று வரும் 17-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் – ரோஹித் ஷர்மா களமிறங்கினார்கள்.

உமேஷ் யாதவின் அசத்தலான பந்துவீச்சில் 3 ஆவது ஒவரில் ரோஹித் சர்மா 4 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்கினார். அவருடன் இஷான் இணைந்து சிறப்பாக ஆடினார்கள். நிதானமாக ஆடி வந்த நிலையில் 8ஆவது ஓவரில் டெவால்ட் ப்ரீவிஸ் 29 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. 11 ஆவது ஓவரில் இஷான் கிஷன் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 15 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 85 ரன்கள் எடுத்து ரன் ரேட்டை உயர்த்தினர்.

பின்னர் களமிறங்கிய திலக், சூர்யகுமாருடன் இணைந்து அதிரடியாக ஆடி அணியின் ஸ்கொரை உயர்த்தினார். 19 ஆவது ஓவரில் சூர்யகுமார் அரைசதம் எடுத்து அணியின் ரன் ரன்களை உயர்த்தினார். இறுதியாக அணி, 20 ஓவர்கள் முடிவில் 161 ரன்கள் எடுத்தனர். 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது.