கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்ட வாய்ப்பு!

வருவாய் பேரிடர் ஆணையர் சத்யகோபால் தென் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்படும் என  தகவல். இதையடுத்து, மீனவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் ஞாயிறு வரை கடல் சீற்றம் வர வாய்ப்புள்ளது. இதனால், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது முக்கியமான ஒன்றாகும் என்று வருவாய் பேரிடர் ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் யாரும் மேற்கண்ட நாட்களில் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் … Read more

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்:பேராசிரியை நிர்மலாதேவியை காவலில் எடுத்து விசாரிக்க  மனுத்தாக்கல்!

நீதிமன்றத்தில், மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க  மனுத்தாக்கல் செய்துள்ளனர். மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். சிபிசிஐடி போலீசார் அளித்த மனுவை ஏற்று இந்த வழக்கு, அருப்புக்கோட்டை … Read more

முறையாக தமிழகத்திற்கு நிதி அளிக்க வலியுறுத்தல் !முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,தமிழகத்திற்குரிய நிதியை முறையாக அளிக்க வேண்டும் என்று மத்திய நிதிக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடர்பாக நிதிக்குழுத் தலைவர் என்,கே.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2011ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார் .மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் அக்கடிதத்தில் விளக்கியுள்ளார். நிதிக்குழு மூலம் தொடர்ந்து தமிழகம் தண்டிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர், … Read more

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்:பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பாக இன்று சந்தானம் குழு விசாரணை!

அருப்புக்கோட்டையில் சந்தானம் குழு, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக, இன்று விசாரணை நடத்துகிறது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பல்கலைக்கழக உயர்பொறுப்புகளில் உள்ளவர்களுக்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து விசாரிக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் என்பவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். சந்தானத்திற்கு உதவியாக, பேராசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்துவதற்கு வசதியாக அன்னை தெரசா கல்லூரி … Read more

அதிக கட்டணம் வசூலித்தால் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் செங்கோட்டையன்!

அமைச்சர் செங்கோட்டையன் ,தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு இனி எந்த தேர்வினை கொண்டு வந்தாலும், அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு மாணவர்களை தயார் படுத்தி வருவதாக கூறினார். இதனிடையே, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மே மாதம் இறுதிக்குள் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அரசு … Read more

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: பெரிய மனிதர்களின் தேவைகளுக்காக கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை!ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்,  பல்கலைக்கழக நிர்வாகத்திலுள்ள பெரிய மனிதர்களின் தேவைகளுக்காக கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது குறித்த வழக்கை குழி தோண்டி புதைக்க சதி நடப்பதாக  குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அப்பிரிவின் தலைவரும், கூடுதல் தலைமை இயக்குனருமான ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலிடத்திலிருந்து எவ்வளவு அழுத்தம் வந்தாலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் ஜெயந்த் முரளிக்கு பதில், 2015-ஆம் ஆண்டில் … Read more

இன்றைய(ஏப்ரல் 20) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் !

நேற்றைய விலையைவிட பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 காசு உயர்ந்து ரூ.76.85க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு 4 பைசாக்கள் அதிகரித்து ரூ.68.90 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மெரினாவில் தொடர் போராட்டம்!

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 29ம் தேதி மெரினாவில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வேல்முருகன் உள்ளிட்டோர், கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ம் தேதி முதல் மெரினா உழைப்பாளர் சிலை முன்பாக தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக கூறினர். இதனிடையே, மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. … Read more

பா.ஜ.க.வின் நன்மதிப்பை நீதிபதி லோயா மரணம் தொடர்பாக வழக்கு கெடுக்கும் நோக்குடன் தொடரப்பட்டது! அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்

மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்,நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு பா.ஜ.க.வின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்குடன் தொடரப்பட்டது என கூறியுள்ளார். தீர்ப்பு குறித்த தகவல்களுடன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை மக்கள் புறக்கணித்துவிட்டதால் நீதிமன்றத்தின் மூலம் அரசியல் செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். இதனிடையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் உடனடியாக ரவிஷங்கர் பிரசாத்துக்கு கிடைத்தது எப்படி என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. உச்சநீதிமன்ற இணையதளம் முடங்கியிருப்பதால் வழக்கறிஞர்களே தீர்ப்பு நகலை பெறாத … Read more

ஹெச்.ராஜாவின் சர்ச்சை பதிவு : மறுபடியும் அட்மின் செய்த செயல் என்று சொல்லுவார் !அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தி.மு.க. குறித்த ஹெச் .ராஜாவின் கருத்து தரம் தாழ்ந்தது என்று தெரிவித்துள்ள நிலையில், இதற்கும் ஹெச்.ராஜாவிடம் இருந்து அட்மின் தவறு என்று பதில் வரக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன் ஹெச்.ராஜா  ட்விட்டர் பக்கத்தில், “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து … Read more