திருநெல்வேலியில் தகராறு !நடுவழியில் பேருந்துகளை நிறுத்திய ஓட்டுனர்கள் !அவதிப்படும் மக்கள்

தனிநபருக்கும், போக்குவரத்து கழகத்திற்கும் இடையே நெல்லையில்    ஏற்பட்ட தகராறுகாரணமாக திடீரென போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் பெரும்பாதிப்புக்குள்ளாகினர் மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை பாளையங்கோட்டை மகராஜநகரில் நிலஉச்சவரம்பு சட்டப்படி தனி நபர் ஒருவரிடம் 60 சென்ட் இடத்தை அரசு கைப்பற்றியது பின்னர் அரசு போக்குவரத்த கழகம். மின்வாரியதிற்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த இடம்  தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமானது என வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததாக கூறபடுகிறது. இந்நிலையில் அந்த இடத்தில் போக்குவரத்து அதிகாரிகாரிகளுக்கும் அந்த தனிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஊழியர்கள் … Read more

சுரப்பா நியமனத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் கைது!

தேமுதிக தலைவர்  விஜயகாந்த் உள்ளிட்ட கட்சியினர்  அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா நியமனத்தை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டநிலையில் கைது செய்யப்பட்டனர். சென்னை சைதாப்பேட்டை பானகல் மாளிகை அருகே திரண்ட தேமுதிகவினர், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காரில் அமர்ந்தபடியே முழக்கம் எழுப்பினார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா காருக்கு வெளியே நின்று முழக்கம் எழுப்பினார். அப்போது தொண்டர்கள் முண்டி அடித்ததால், அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி அவர்களை விரட்டி அடித்தார். … Read more

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்:பேராசிரியை நிர்மலா தேவிக்கு 5 நாள் சிபிசிஐடி காவல் வழங்கி சாத்தூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சாத்தூர் நீதிமன்றத்தில், மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்தனர். மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீசார் … Read more

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 100- க்கும் மேற்பட்டோர் போராட்டம்!

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்  சுமார் 100 க்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலையை  முற்றுகையிடும் போராட்டத்தில்  ஈடுபட்டனர் . தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 16 இடங்களுக்கும் மேலாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராடிவருகின்றனர். இதனை அடக்கும் விதமாக காவல்துறையும் பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருகின்றது .இந்நிலையில் இன்று  ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்  சுமார் 100 க்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலையை  முற்றுகையிடும் போராட்டத்தில்  … Read more

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்:சாத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவி ஆஜர்!

சாத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவியை ஆஜர்படுத்தியது போலீஸ. சாத்தூர் நீதிமன்றத்தில், மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்தனர். மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். சிபிசிஐடி … Read more

ஹெச். ராஜா,எஸ்.வி. சேகர் ரெண்டுபேரும் சரியான சைபர் சைக்கோக்கள்!அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவும், எஸ்.வி. சேகரும் சைபர் சைக்கோக்கள் என்று  கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவரிடம், ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகர் ஆகியோர் மீது புகார் அளித்தால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் ஹெச்.ராஜா பெண்களையும், எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தி பேசியிருப்பதற்கும் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். முதலமைச்சர் பற்றி தவறாக பேசிய ஹெச். ராஜா மீது தமிழக அரசு வழக்கு தொடரும் … Read more

ஹெச்.ராஜா ,எஸ்.வி.சேகர் பேச்சே சரியில்லை ! மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகள் தெரிவிப்பதை ஹெச்.ராஜா உள்ளிட்டோர் தவிர்க்க வேண்டும் என, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்  கூறினார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், எஸ்.வி.சேகர் பெண் செய்தியாளர்களை  இழிவுபடுத்தும் வகையில் ட்விட்டர் பதிவிட்டது குறித்து கேட்டபோது, அதுகுறித்து தெரியாது என்பதால் கருத்து சொல்ல விரும்பவில்லை என கூறினார். ஒரு பெண் ஆளுமையின் கீழ் இருந்த தாங்கள் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கக் கூடாதா என செய்தியாளர் கேட்டுமுடிப்பதற்குள் சந்திப்பை … Read more

கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்ட வாய்ப்பு!

வருவாய் பேரிடர் ஆணையர் சத்யகோபால் தென் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்படும் என  தகவல். இதையடுத்து, மீனவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் ஞாயிறு வரை கடல் சீற்றம் வர வாய்ப்புள்ளது. இதனால், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது முக்கியமான ஒன்றாகும் என்று வருவாய் பேரிடர் ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் யாரும் மேற்கண்ட நாட்களில் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் … Read more

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்:பேராசிரியை நிர்மலாதேவியை காவலில் எடுத்து விசாரிக்க  மனுத்தாக்கல்!

நீதிமன்றத்தில், மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க  மனுத்தாக்கல் செய்துள்ளனர். மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். சிபிசிஐடி போலீசார் அளித்த மனுவை ஏற்று இந்த வழக்கு, அருப்புக்கோட்டை … Read more

முறையாக தமிழகத்திற்கு நிதி அளிக்க வலியுறுத்தல் !முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,தமிழகத்திற்குரிய நிதியை முறையாக அளிக்க வேண்டும் என்று மத்திய நிதிக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடர்பாக நிதிக்குழுத் தலைவர் என்,கே.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2011ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார் .மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் அக்கடிதத்தில் விளக்கியுள்ளார். நிதிக்குழு மூலம் தொடர்ந்து தமிழகம் தண்டிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர், … Read more