இன்றைய(மே-18)பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!

லிட்டருக்கு பெட்ரோல் விலை ரூ.78.46 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.80 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை விபரம்: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.46 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.80 காசுகளாகவும் உள்ளன. கடுமையாக … Read more

BREAKING NEWS:தமிழகம், கர்நாடகா உள்பட 5 மாநிலங்களுக்கு கடும் எச்சரிக்கை!பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு!இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம்,ஏடன் வளைகுடா பகுதியில் சாகர் புயல் உருவாகியுள்ளதை அடுத்து, தமிழகம், கர்நாடகா உள்பட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால், அதற்கு சாகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடனின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இருந்து சுமார் 390 கிலோ மீட்டர் தொலைவிலும், சுகுத்தரா தீவின் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் சுமார் 560 … Read more

சில நாட்களுக்குள்ளாக ​விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்!கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடியூரப்பா,பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் தேவையில்லை என்று  தெரிவித்துள்ளார். முதலமைச்சராகப் பதவியேற்ற எடியூரப்பா பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு தமக்கு வாழ்த்து தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். கர்நாடகாவில் பாஜக பெற்ற வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சித் தலைவர் அமித் ஷாவின் பரப்புரையே காரணம் என தெரிவித்த எடியூரப்பா, தமக்கு ஆதரவு அளித்த அனைத்து பாஜக தலைவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். விவசாயிகளின் கடன்கள் … Read more

காவிரி நீர் விவகாரம்:இன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்!

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் 4 மாநிலங்களும் நீரைச் சுமுகமாக பிரித்து வழங்குவதற்காக அமைக்கப்படக் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த தனது இறுதி உத்தரவை இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் இறுதித்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி வரைவு செயல்திட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கடந்த மே 15 ஆம் தேதி  தாக்கல் செய்தார். அந்த வரைவு செயல்திட்ட அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை … Read more

பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் பெண்களுக்கு என்ன நடக்கிறது? உண்மையில் அவர்கள் வாழ்க்கையில் உயரும் வகையில் நடத்தப்படுகின்றனரா? கிரண்பேடி

புதுச்செரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி,பெண்களை மேல்படிப்பு படிக்க வைப்பதற்கான சமூக தீர்திருத்தம் தேவை என்று  தெரிவித்துள்ளார். பிளஸ் 2 முடிவுகள் கடந்த முன் தினம்  வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து கிரண்பேடி சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள கருத்து,பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் பெண்களுக்கு என்ன நடக்கிறது? உண்மையில் அவர்கள் வாழ்க்கையில் உயரும் வகையில் நடத்தப்படுகின்றனரா? பெற்றோரின் பழமைவாத நம்பிக்கையால் பலர் மேல்படிப்பு படிக்கும் வாய்ப்பை இழக்கின்றனர். தனிப்பட்ட முறையில் மாணவிகளிடம் பேசும்போது தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும், பெற்றோரிடம் திருமணம் செய்து … Read more

இணையத்தை தெறிக்க விடும் தேஜ்பிரதாப் யாதவ் ஜோடியின் புகைப்படங்கள்!

சமூகவலைத்தளங்களில்,பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ்பிரதாப் யாதவ், தனது மனைவியுடன் சைக்கிளில் பயணிக்கும் புகைப்படங்கள்  வைரலாகி வருகின்றன. தேஜ்பிரதாப் யாதவுக்கும், ராஷ்டிரிய ஜனதா தள முன்னாள் அமைச்சர் சந்திரிகா பிரசாத் ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 12-ஆம் தேதி  திருமணம் நடந்தது. திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பெருமளவு பகிரப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அந்த புதுமணத் தம்பதி பாட்னா நகர வீதிகளில் சைக்கிளில் பயணிக்கும் புகைப்படங்களும் பரவி வருகின்றன. தேஜ்பிரதாப் … Read more

எத்தகைய பேச்சுவார்த்தை நடவடிக்கைக்கும் இந்தியாவுடன் பேசத் தயார் ! பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர்

பாகிஸ்தான் ராணுவம்,இந்தியாவுடனான எத்தகைய பேச்சுவார்த்தை நடவடிக்கைகளுக்கும் தயாராக இருப்பதாக  தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளிலிருந்து நழுவுவதாகவும், பேச்சுவார்த்தைகளில் இருந்து மாறுபட்ட நிலையை எடுத்து அமைதி நடவடிக்கைகளை சீர்குலைப்பதாகவும் தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிஃப் கஃபூர் தாங்கள் அந்த நிலையைக் கடந்துவிட்டதாகவும் எத்தகைய பேச்சுவார்த்தை நடவடிக்கைக்கும் உட்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்..!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், இன்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். பனங்குடியில் பேசிய அவர், மக்கள் நீதி மய்யத்தின் வழிகாட்டிகள் மக்கள்தான் என்றும், மக்களின் தேவையை அறியாமல் எதுவும் செய்ய முடியாது என்பதால் நேரில் சந்திக்க வந்ததாகவும் தெரிவித்தார்.மேலும் அவர் நாளை தூத்துக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகா முதல்வர் பிரச்சினை எதிரொலி: கோவா காங்கிரஸ், பீகார் ஆர்ஜேடி ஆட்சியமைக்க உரிமை கோருகிறது!

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம்,காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு மொத்தம் 117 இடங்கள் உள்ள போது தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வாஜுபாய் வாலா அழைத்ததையடுத்து கோவா, பிஹார் ஆகிய மாநிலங்களிலும் மாற்றங்கள் கோரப்பட்டுள்ளது. காங்கிரஸ் கோவா கிளையும், பிஹாரின் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் இதே காரணத்தைக் காட்டி தங்களும் ஆட்சியமைக்கத் தகுதியானவர்கள்தான் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர். கோவாவில் காங்கிரஸும் பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றன. … Read more

நாகப்பட்டினம் கடற்கரையில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மீனவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு..!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடற்கரையில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மீனவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேதாரண்யம் சன்னதி கடற்கரை பகுதியில் திடக்கழிவு மேலாண்மைதிட்டத்தின் கீழ் குப்பைக் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது என ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த மீனவமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு குப்பை கிடங்கு அமைப்பதற்காக இன்று ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழிதோண்டும் பணி தொடங்கியது. இதையறிந்த கிராமமக்கள் கிடங்கு … Read more