நடிகர் ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்கு?மனிதனுக்கு போராட உரிமை இல்லையா?சரத்குமார் ஆவேசம்

மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, நடிகர் ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று  சென்னை விமான நிலையத்தில் சரத்குமார் தெரிவித்துள்ளார். மனிதனுக்கு போராட உரிமை இல்லையா? தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினி கூறியதற்கு சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று  தூத்துக்குடியில் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார். நேற்று நலம் விசாரித்த பின் செய்தியாளர் … Read more

திருச்சி அருகே பிளஸ் டூ மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

பிளஸ் டூ மாணவியை திருச்சி மணப்பாறை அருகே  ஏமாற்றி கர்ப்பிணி ஆக்கி விட்டு வேறொரு பெண்ணை மணக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். சீத்தப்பட்டியை சேர்ந்த சிறுமியை, இதே ஊரை சேர்ந்த பழனிச்சாமி என்ற இளைஞர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.இதில் அந்தப் பெண் கர்ப்பம் அடையவே, அவரை ஏமாற்றி விட்டு, மம்மனியூர் கிராமத்தை சேர்ந்த வேறொரு பெண்ணை அவசர, அவசரமாக பழனிச்சாமி திருமணம் செய்து கொண்டார். தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த … Read more

14 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

இன்று நான்கு மக்களவை,10 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெங்களூர் ஆர்.ஆர். நகர் தொகுதியில் போலி வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் கடந்த 28ம் தேதி இதர இடைத்தேர்தல்களுடன் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகளும் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா மற்றும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள … Read more

நெல்லையில் மகனை விலங்கிட்டு வீட்டுச் சிறையில் வைத்த தந்தை!போலீஸ் விசாரணை

காதலித்த சிறுமியை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு தப்ப முயன்ற இளைஞன் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே  ஒவ்வொரு முறையும் உறவினர்களிடம் கையும், களவுமாக பிடிபடும் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதால், கை மற்றும் கால்களுக்கு விலங்கிட்டு அவரது உறவினர்கள் வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர். கடைய நல்லூர் அருகே மேல கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டை தெருவை சார்ந்த சுப்பையா மகன் கருப்பசாமி. 21 வயதான இவர் அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய உறவுக்கார பெண்ணை நீண்ட காலம் … Read more

ஊழியரின் தவறால் ஒரு பைசா குறைப்பு நிகழ்ந்துவிட்டது!பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ,பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டது ஊழியரின் தவறால் நிகழ்ந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை புதன்கிழமை ஒரு பைசா மட்டும் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தன. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்க தொடங்கியதில் இருந்து ஒரு பைசா, 12 பைசா, 27 பைசா என விலை … Read more

பால்குளிரூட்டும் நிலையத்தோடு ஐஸ்கிரீம் தொழிற்சாலை மதுரையில் அமைக்கப்படும்! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்தி பாலாஜி ,மதுரையில், நூறு கோடி ரூபாய் செலவில், பால் குளிரூட்டும் நிலையத்தோடு அமைக்கப்படும் ஐஸ்கீரிம் தொழிற்சாலையை, முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி விரைவில் தொடங்கி வைப்பார் என தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், மதுரை மத்திய தொகுதி உறுப்பினர் ராஜன்செல்லப்பா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கும் பணிகள் மீது வழக்குகள் நிலுவையில் இருந்ததால் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்திருக்கிறார். மேலும் … Read more

இன்று 14 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை!

மக்களவை தொகுதிகளான உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பந்தாரா மற்றும் நாகாலாந்து போன்ற நான்கு தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலஸ் கடேகோன், உத்தர பிரதேசத்தில் உள்ள நூர்பூர், பீகாரில் உள்ள ஜோகிஹாத், ஜார்கண்டில் உள்ள கோமியா, சில்லி, கேரளாவில் உள்ள செங்கனூர், மேகாலயாவில் உள்ள அம்பாதி, பஞ்சாபில் உள்ள சாகோட், உத்தரகண்டில் உள்ள தாரளி, மேற்கு வங்கத்தில் உள்ள மகேஷ்தலா, கர்நாடகவில் உள்ள ஆர்.ஆர். நகர் ஆகிய பத்து சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 28 ஆம் … Read more

நாளை கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு!

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் நாளை திறக்கப்பட இருக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கிய கோடை விடுமுறை இன்றுடன் முடிவடைகிறது. மாநிலம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை நிறம் மாற்றப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி … Read more

மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோலின் விலை லிட்டருக்கு 55 பைசா அதிகரித்து ரூ.81.35 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு 54 பைசா அதிகரித்து ரூ.73.12 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய  பெட்ரோல்,டீசல் விலை: நேற்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசுகள் குறைந்து, 80 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 60 காசுகள் குறைந்து. 72 ரூபாய் 58 காசுகளுக்கு விற்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமனம்!

ராஜேந்திரன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக  நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ராஜேந்திரனை 3 ஆண்டுகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணிபுரியும் ராஜேந்திரன், கல்வி மற்றும் நிர்வாகத்தில் சிறந்த அனுபவம் கொண்டவர் என்று கூறப்பட்டுள்ளது. 27 ஆண்டுகளாக ஆசிரியராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயக்குனர் மற்றும் துறை தலைவராக பணிபுரிந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.