அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை நியமிக்கக் கூடாது! அன்புமணி

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி,காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஊழல் புகாருக்கு உள்ளானவரை நியமிக்கக் கூடாது எனப்  தெரிவித்துள்ளார். இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கத் தேர்வுக்குழு பரிந்துரைத்தவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸ் 1998-2001 காலத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றியபோது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததைக் குறிப்பிட்டுள்ளார். நேர்காணல் நடத்தும் முன்பே சுபாஷ் சந்திர போசைப் புதிய துணைவேந்தராக நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரைத் … Read more

சென்னை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலி!

கட்டுமானப் பணிகள் நடைபெறும்போதே சென்னை சேத்துப்பட்டில் கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஸ்பர்டாங்க் (spartank)சாலையில் வணிகவளாகம் ஒன்றுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதில், அமிதா சிட்டி டெவலபர்ஸ் ஜி.பி.ஏ. (GPA) எனும் கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர் குணச்சந்திரன் தலைமையில் பிற மாநிலத்தவர் உள்பட சுமார் 30 பேர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ரெஸ்டாரன்ட், உள்ளிட்ட பல்வேறு … Read more

ஜூன் 4ஆம் தேதி வரை சீமானை கைது செய்வதற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை!

திருச்சி காவல்துறைக்கு,நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை ஜூன் 4 ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது எனத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் கடந்த 19ஆம் தேதி மதிமுக – நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீமான் தாக்கல் செய்த மனுவில், இரு கட்சித் தொண்டர்களுக்கும் மோதல் நடக்கும் … Read more

சிவகங்கை அருகே படுகொலையைக் கண்டித்துப் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்!

சாதி மோதலில் சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில்  இருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் கொலையாளிகளைக் கைது செய்யக் கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஊர்மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் ஒரு சமூகத்தினர் நடத்திய தாக்குதலில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. இதைக் கண்டித்துக் கச்சநத்தம் ஊர்மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று இரண்டாம் நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு … Read more

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்!

பொதுத்துறை வங்கி ஊழியர்கள்  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் இன்றும், நாளையும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக வங்கிக் கிளை முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 200 பொதுத்துறை வங்கிக் கிளைகள் மூடப்பட்ட நிலையில், நாகர்கோவிலில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவையில் ரயில்நிலையம் எதிரே உள்ள பரோடா வங்கியில் … Read more

ஆம்புலன்ஸ் அவசர உதவிக்கு செல்லும் சராசரி நேரம் குறைந்துள்ளது ! அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,விபத்து உள்ளிட்ட அவசர கால மருத்துவ உதவிக்கு வரும் 108 ஆம்புலன்ஸ் செல்லக்கூடிய நேரம் முன்பு இருந்ததைவிட, சரி பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். விபத்து நடத்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லக்கூடிய  சராசரி நேரமானது 17 நிமிடங்களில் இருந்து 8.32 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதுவே, கிராமப்புறங்களில் 13.30 நிமிடங்களாக, குறைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். மேலும் … Read more

6 பேரின் உடலுக்கு ஒருவாரம் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது!வழக்கு ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று  சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே 27 ஆம் தேதி மீனவர்களின் நிபந்தனையால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் … Read more

சென்னையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்த சிறுவன் உயிரிழப்பு!

உடற்பயிற்சிக் கூடத்தில் தம்புள்சை வைத்து பயிற்சி செய்த போது தலையில் விழுந்ததால் காயமடைந்த 15வயதுச் சிறுவன் சென்னை வில்லிவாக்கத்தில்  பரிதாபமாக உயிரிழந்தான். சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் மோகன் பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சியடைந்து 11ஆம் வகுப்புக்குச் செல்ல இருந்தான். கோடை விடுமுறையையொட்டி வில்லிவாக்கம் நாதமுனியில் உள்ள வி லிப்ட் என்கிற தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்து பயிற்சி செய்து வந்தான். நேற்று மாலையில் மோகன் இரு கைகளிலும் தம்புள்சைத் தூக்கிப் பயிற்சி … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது!உயர்நீதிமன்றம் மறு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று  சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே 27 ஆம் தேதி மீனவர்களின் நிபந்தனையால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் … Read more

பொதுவான சட்டம் தனியார் பள்ளிகளுக்கும் இயற்ற குழு அமைப்பு!

சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் ,அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுத்திட, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு பொதுப்பாடத்தின்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் அனைத்தும், மாநில பள்ளிக்கல்வி பொதுப்பாட சட்டம் 2010-ன் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை, 6 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கான கட்டணத்தை கல்வி கட்டண குழு நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பள்ளியால் நிர்ணயிக்கப்பட்ட … Read more