இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் நல்லது பிரதமர் மோடி…இல்லை கேட்டது அமித்ஷா

“இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பயன்படுகின்றன, அவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்தவேண்டும் ” -இன்றைய தினம் பிரதமர் மந்திரி நரேந்திர மோதியின் “mankibath” அதாவது “மனதின் குரல்” நிகழ்ச்சி மூலம் வானொலி, தொலைக்காட்சியில் பேசியது. . “இணைய தளத்திலும் சமூக வலை தளங்களிலும் .. ஏன் வானொலி தொலைக் காட்சிகளில் கூட பலர் தவறான பிரச்சாரங்களை செய்கின்றனர். அவற்றை மக்கள் நம்பக கூடாது” – ஒரு வாரத்துக்கு முன்னர் பா.ஜ.க. தலைவர் அமித் … Read more

விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஏழுமலையான் கூலி கொடுக்கட்டும்…!

திராவிடம் என்ற சொல்லே தமிழ் உணர்வை நசுக்கி அழிக்கும் சொல்லாக இருக்கிறது என ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.. மேலும் அவர் பெரியார் ,விஜய் மற்றும் அவரது தந்தையை பற்றி பின்வருமாறு பேசியுள்ளார்.அவர் கூறியதாவது ஹிந்துவிற்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் எனவும் ஈ.வே.ரா., கால்டுவெல்லின் கைக்கூலி எனவும் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஏழுமலையான் கூலி கொடுக்கட்டும் எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறாக பேசி வருகிறார்.

பத்மாவதி விவகாரத்தில் பிரதமர் மௌனமாக இருப்பது ஏன்..?? பிஜேபி எம்.பி.சத்ருகன் சின்ஹா

“பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் ஒரு இந்துத்துவ கோஷ்டி அடி.வெட்டு.குத்து.கொலை என்று நாட்டை ரணகளமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இவ்விஷயத்தில் ஒன்றுமே பேசாமல் மரண அமைதி காப்பதேன்?” -நடிகரும்,பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்மாவதி படத்தை திரையிட மே.வங்க முதலமைச்சர் ஏற்பாடு!

பத்மாவதி படத்தை பெருமளவில் ஹிந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த படம் சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கபட்டுள்ளது. மத்தியப்பிரதேசம்,  உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த படத்தை நாங்கள் வெளியிட அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். தற்போது மேற்கு வங்காளம் மாநிலத்தில் பத்மாவதி படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்து தருவோம் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தினகரன் இனி சுயேட்சையாகத்தான் தேர்தலில் நிற்க முடியும்…! அதிமுக எம்.பி

தீபா போலதான் தினகரன்… சுயேட்சை வேட்பாளராகதான் ஆர்.கே.நகர் தேர்தலில் அவர் போட்டியிடமுடியும் ஆர்.கே.நகரில் பாஜக ஆதரவை நினைத்து கவலைப்படும் அளவிற்கு அவர்களது நிலை இல்லை என நான் நினைக்கிறேன். இரட்டை இலை இப்போதுதான் கிடைத்திருக்கிறது, வரக்கூடிய காலக்கட்டத்தில் சசிகலாவை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது குறித்த கேள்விக்கு பதில் கிடைக்கும் என ஆளுனரை சந்தித்த பின்பு பேட்டியளித்தார் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன்

முடக்கியவனே கொடுத்து விட்டாண்டி..!

இரட்டை இலையை மீட்டுவிட்டோம் என்று ஒபிஎஸ் குதூகலிக்கிறார்! முடக்கியதே இவர்தானே! இவரைப் போலவே தேர்தல் ஆணையத்திலும் “நியாயவான்கள்” நிறைந்திருக்கிறார்கள்! ஒபிஎஸ் சோடு 12 எம்எல்ஏக்கள் போய்விட்டதால் முடக்கினோம் என்றவர்கள் தினகரனோடு 20 எம்எல்ஏக்களே இருப்பதால் ஒபிஎஸ் உள்ள அணியிடம் கொடுத்து விட்டோம் என்கிறார்கள் ! இவர்களை இயக்குவது யார் என்பது சின்னப் பிள்ளைகளுக்கும் தெிரிகிறது. “முடக்கியவனே கொடுத்து விட்டாண்டி” என்று புதுப் பாட்டு பாடுகிறார்கள். –Ramalingam Kathiresan   இரட்டை இலையை ஜெயிச்சுட்டாங்களாமாம்.. அந்த இலையில் உயிரே இல்லை பாவிகளே.. –Bala G

பிரகாஷ் ராஜை இழிவுபடுத்திய பாஜக எம் பிக்கு நோட்டீஸ்…!

பத்திரிகையாளர் கவுரி படுகொலையை பிரதமர் கண்டிக்காமல் இருப்பது நியாயமல்ல என்று நடிகர் பிரகாஷ் ராஜ் சொன்னதற்காக அவரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி சமூகவலைத் தளங்களில் தொடர்ந்து பதிவுகளைப் போட்டிருக்கிறார் சிம்ஹா. எழுப்பப்பட்ட நியாமான விமர்சனத்திற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் விமர்சித்தவரை தரக்குறைவாகத் தாக்கியிருக்கிறார் மைசூரின் பாஜக எம் பி பிரதாப் சிம்ஹா.அக்கட்சி எம் பி யின் யோக்யதையே இப்படித்தான் இருக்கிறது என்றால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்று ஊகித்துக் கொள்ளலாம். அதற்காக பிரகாஷ் ராஜ் பயந்து பின்வாங்கவில்லை. … Read more

உ பி யில் “என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் ” ஆட்சியா…?

சாமியார் ஆட்சி என்றால் அது சாத்வீகமாக இருக்கும் என்று பலரும் நினைப் பார்கள். ஆனால் உ பி யில் நடக்கும் பாஜக சாமியார் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி கொலைகார ஆட்சியாக உள்ளது. அவர் ஆட்சிக்கு வந்த முதல் ஆறுமாதங்களிலேயே 431என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 22 பேர் மாண்டு போனார்ககள், 88 பேர் படுகாயம்பட்டார்கள். போலிசார் நடத்தும் என்கவுன்டர்கள் அனேகமாக போலியானவை என்பது உலகறிந்த ரகசியம். குற்றவாளிகளை பிடித்து தண்டனை வாங்கித்தர வேண்டியது அரசின் கடமை என்பதில் அட்டியில்லை. … Read more

ஜிஎஸ்டி க்கு ஒட்டுங்க ஸ்டிக்கர் இங்கையுமா ..

புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. நுகர்வோர் விவகாரங்களின் துறையின் கீழ், அளவீட்டு மற்றும் பெயரிடல் சம்பந்தமான விஷயங்களை மேற்பார்வையிடுகின்ற மெட்ரோலயியல் பிரிவினர் இந்த விளைவுகளை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார். ‘MRP க்கள் (அதிகபட்ச சில்லறை விலைகள்) அறிவிக்கப்படுவதற்கு கூடுதல் ஸ்டிஅரக்கர் அல்லது ஸ்டாம்பைச் செய்வதற்கு சட்டரீதியான விதிமுறை விதிகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.’ MRP இன் முன்கூட்டியே முன்கூட்டியே அறிவிக்கப்படும். கடந்த வாரம் … Read more

“தூய்மை இந்தியா” திட்டத்தின் விளம்பர செலவு மட்டும் ரூ.530 கோடியாம்…?? ஏன்..?

பிரதமர் நரேந்திர மோடியின் “தூய்மை இந்தியா” திட்டம் என்பது தொலைக்காட்சிகளிலும் செய்திப் பத்திரிக்கைகளிலும் அரசு சார்பில் கொடுக்கப்படும் விளம்பரங்களில் மட்டுமே உள்ளது. அப்படிப்பட்ட விளம்பரங்களுக்காக அரசு இதுவரை 530 கோடி ருபாய் செலவழித்துள்ளது. மற்றபடி அடிப்படை முன்னேற்றம் ஒன்றுமே அந்த திட்டத்தால் மக்களுக்கு கிடைத்திடவில்லை என்பது எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் குற்றசாட்டாக உள்ளது.