கேரளாவில் உள்ள ஆதி சங்கரர் பிறந்த இடத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடி!! 

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காலடி கிராமத்தில் உள்ள துறவி-தத்துவ ஞானி ஆதி சங்கராச்சாரியார் பிறந்த இடமான ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை புரிந்தார். “சிறந்த இந்திய துறவியின்” பாரம்பரியத்தை போற்றும் வகையில், பெரியாறு நதிக்கரையில் அமைந்துள்ள ஆதி சங்கரரின் பிறந்த ஸ்தலத்திற்கு பிரதமர் வருகை புரிந்தார். அதன்பின், 4500 கோடி ரூபாய் மதிப்பிலான கொச்சி மெட்ரோ மற்றும் இந்திய ரயில்வேயின் பல்வேறு திட்டங்களை பிரதமர் அடிக்கல் நாட்டி … Read more

2025க்குள் சென்னை-பெங்களூரு பசுமை விரைவுச் சாலை!!

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 26 புதிய பசுமை விரைவுச் சாலைகள் அமைக்கப்படும் என்றும் அதில் பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையும் ஒன்று என்று நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார். இந்த விரைவுச் சாலை அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார். விரைவுச் சாலை கர்நாடகாவில் உள்ள ஹோஸ்கோட் நகரில் தொடங்கி, சென்னையில் இருந்து கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் முடிவடையும். இந்த அதிவேக … Read more

கண்ணீர் விட்டு அழுத துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு..

துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவருமான எம் வெங்கையா நாயுடு பணி ஓய்வு பெற இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இன்று நடந்த ராஜ்யசபா கூட்டத்தொடரின் போது, ​​அரசியல் தலைவர்கள் பிரியாவிடை உரைகளை ஆற்றியதால் அவர் உணர்ச்சிவசப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பல தலைவர்கள் ஓய்வு பெறும் துணை ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரியாவிடை உரைகளை நிகழ்த்தினர். திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி டெரெக் ஓ பிரையன், … Read more

இந்தியாவின் முதல் சர்வதேச தங்க பரிமாற்றத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..

இன்று பிரதமர் நரேந்திர மோடி  காந்திநகருக்கு அருகிலுள்ள குஜராத் சர்வதேச நிதி டெக்-சிட்டியில் (கிஃப்ட் சிட்டி) சர்வதேச நிதிச் சேவை மையங்கள் (ஐஎஃப்எஸ்சி) ஆணையத்தின் தலைமையகக் கட்டிடத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டிய பின், ​​நாட்டின் முதல் சர்வதேச பொன் பரிமாற்றமான இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்சை (ஐஐபிஎக்ஸ்) தொடங்கி வைக்கிறார். இந்த பரிவர்த்தனையானது திறமையான விலையைக் கண்டறியவும், பொறுப்பான ஆதாரம் மற்றும் தரத்தை உறுதிப்படுத்தவும் உதவும், தவிர, இந்தியாவில் தங்கத்தை நிதியாக்குவதற்கு உதவுகிறது என்று IFSC ஆணையம் தெரிவித்துள்ளது. … Read more

#G7Summit:ஜி7 உச்சி மாநாடு – இன்று பங்கேற்கும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி,இன்றும் நாளையும் நடைபெறும் 48-வது ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு ஜெர்மனிக்கு புறப்பட்டார்.அதன்படி,G7 மற்றும் விருந்தினர் நாடுகளுடன் இன்று சந்திப்புகளை நடத்துகிறார் மற்றும் சமகால பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறார். #WATCH | Delhi: Prime Minister Narendra Modi departs for Germany for the G7 Summit. After the Summit, PM will travel to UAE on June 28 to pay his condolences on … Read more

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினை சென்றடைந்தார் பிரதமர் – உற்சாக வரவேற்பு அளித்த இந்தியர்கள்…!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3 நாள் சுற்றுப்பயணமாக 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்த வகையில் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த மூன்று நாள் பயணத்தின்போது பிரதமர் கிட்டத்தட்ட 25 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று ஜெர்மன் நாட்டின் தலைநகராகிய பெர்லினை சென்றடைந்துள்ளார். அங்கு பிரதமரை சிறப்பாக வரவேற்றுள்ளனர். மேலும் … Read more

சக்திவாய்ந்த 100 இந்தியர்களின் பட்டியலில் பிரதமருக்கு முதலிடம் .., முதல்வருக்கு எந்த இடம் தெரியுமா?

‘பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் இந்தியாவின் சக்திவாய்ந்த 100 நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது இடத்தில் அமித்ஷாவும், மூன்றாவது இடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அவர்களும் இடம் பெற்றுள்ளனர். மேலும் அடுத்தடுத்ததாக ஜேபி நட்டா, முகேஷ் அம்பானி, யோகி ஆதித்யநாத், கௌதம் அதானி, அஜித் தோவால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 11 ஆவது … Read more

ரஷ்ய அதிபருடன் தொலைபேசி வாயிலாக பேசுகிறார் பிரதமர் மோடி…!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று பேசவுள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் 7-வது நாள் இன்றும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இந்த … Read more

“மின்சாரத் திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்” – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

கடந்த 2003 ஆம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு,மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மின்சாரத் திருத்த சட்டத் திருத்தம்,தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் இருப்பதோடு, மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும் உள்ளதால்,இந்தச் சட்டத் திருத்த முன்வடிவினை … Read more

அரசே…உங்களுடைய பொய்யில் இருந்து எப்பொழுது எங்களுக்கு ‘விடியல்’? – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி!

திமுகவின் பொய்யில் இருந்து எப்பொழுது எங்களுக்கு ‘விடியல்’ அரசே? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.அதன்படி, இந்த விலை குறைப்பானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து,கர்நாடக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை 7 ரூபாய் குறைத்திருப்பதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.அதேபோல,பல … Read more