கேரளாவில் உள்ள ஆதி சங்கரர் பிறந்த இடத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடி!! 

By

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காலடி கிராமத்தில் உள்ள துறவி-தத்துவ ஞானி ஆதி சங்கராச்சாரியார் பிறந்த இடமான ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை புரிந்தார்.

   
   

“சிறந்த இந்திய துறவியின்” பாரம்பரியத்தை போற்றும் வகையில், பெரியாறு நதிக்கரையில் அமைந்துள்ள ஆதி சங்கரரின் பிறந்த ஸ்தலத்திற்கு பிரதமர் வருகை புரிந்தார். அதன்பின், 4500 கோடி ரூபாய் மதிப்பிலான கொச்சி மெட்ரோ மற்றும் இந்திய ரயில்வேயின் பல்வேறு திட்டங்களை பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் என முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலை பிரதமர் நாளை  தொடங்கி வைக்கிறார்.

Dinasuvadu Media @2023