ஜேஇஇ தேர்வில் சிக்கல்.? அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி.!

ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு உள்ள சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.  கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாமல் தேர்ச்சி எனும் சான்று வாங்கிய மாணவர்கள் தற்போது 12ஆம் வகுப்பு முடித்து ஐஐடி கல்லூரியில் சேருவதற்கு எழுதும் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை எழுந்துள்ளது. ஏனென்றால், தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத 10ஆம் வகுப்பு … Read more

#BREAKING: “நம்ம ஸ்கூல்” திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான பிரத்யேக இணையதளத்தையும் சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர். இந்த திட்டம் மூலம் முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிஎஸ்ஆர் நிதியில் பள்ளிகளின் கட்டமைப்பு, ஆய்வகங்கள் … Read more

#JustNow : குஷியில் மாணவர்கள்..! அரையாண்டு விடுமுறை அறிவிப்பு..!

வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.  பள்ளி மாணவர்களுக்கு தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. வரும் 23-ஆம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில், வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் விடுமுறை எதிரொலி.! நாளை சென்னை பள்ளிகள் செயல்படும்.!

மாண்டஸ் புயல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய நாளை சென்னையில் பள்ளிகள் செயல்படும்.  வங்கக்கடலில் உருவாகி ஓய்ந்த மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு அப்போது விடுமுறைகள் அளிக்கப்பட்டன. தற்போது இதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 9ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய நாளை நவம்பர் 17ஆம் தேதி சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிளமை … Read more

தொலைதூர கல்வியில் பயின்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியில்லை.? உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

தொலைதூர கல்வி நிறுவங்களில் பயின்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுத்தியுள்ளது.  தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் நேரடி கல்லூரி வகுப்பில் பயிலாதவர்கள் பெரும்பாலானோர் இருக்கிறார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . இதுகுறித்து மேலும் கூறுகையில் , தொலைதூர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் பெரும்பாலும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பயின்று வருகின்றனர். இந்த நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும். தொலைதூர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் ஆசியராக பணியாற்ற தகுதிஇல்லாதவர்கள். அதற்கு … Read more

6ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் ரம்மி – கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

 6ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி, அடித்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.  ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்கான முயற்சியில் தமிழக ராசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும், இது தொடர்பாக  விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறியதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், 6ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் … Read more

கல்வி தொலைக்காட்சி டெண்டருக்கு உயர்நீதிமன்றம் திடீர் தடை.! பள்ளிக்கல்வித்துறை பதில் தர உத்தரவு.!

தலைமை தொழில்நுட்ப அதிகாரி இல்லாமல் டெண்டர் விட கூடாது என கல்வி தொலைக்காட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.  மாணவர்களுக்கு உபயோகப்படும் வகையில் அரசால் நடத்தப்பட்டு வரும் டிவி சேனல் கல்வி தொலைக்காட்சி. இதில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகின்றன. கல்வி தொலைக்காட்சிகாக தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட இருந்தது. இதற்கு தடைகேட்டு, மணிகண்ட பூபதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதாவது, கல்வி தொலைக்காட்சியில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி என்ற ஒருவர் … Read more

தமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்..!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுகிறது.  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த  கூட்டத்தில், பள்ளியின் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலின் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத்திட்டங்களில் செயல்பாடு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்த … Read more

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

டெட் (TET) எனும்  ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் விரைவில் நடைபெற உள்ளது. இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், டெட் (TET) எனும்  ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் … Read more

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.!

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணபலன்களை வழங்காத விவகாரம் தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உயர்நீதிமன்ற குழுவானது தமிழகத்தில் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1993 அரசாணை படி, பணபலங்களை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தற்போது வரையில் அரசாணைப்படி பணபலன்கள் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இதனால், ஆசிரியர் ஹரிஹரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, பல முறை பள்ளிக்கல்வித்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது. … Read more