டெல்லியில் கடும் குளிர்… ஜனவரி 12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனியில் இருந்து தங்களை காத்துக்கொள்ள சாலையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர். இந்நிலையில், டெல்லியில் கடுமையான குளிர் காரணமாக நர்சரி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை என டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி இன்று தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லியில் … Read more

கனமழை… 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.! 

Heavy Rain - 8 district school leave

தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகிறார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், தேனி மாவட்டத்தில் பள்ளிகல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ள்ளனர். அதே போல, நீலகிரி, புதுக்கோட்டை, விருதுநகர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்திற்கு ஏற்கனவே 5 நாள் … Read more

கனமழை எதிரொலி..! 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலியால் நேற்று தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆரஞ்ச் அலர்ட்..! நாளை … Read more

டெல்லியில் காற்று மாசுபாடு – நவ.11-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல்…!

Pollution

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த நிலையில், காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் காற்று மாசு காரணமாக நவ.11-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். அதன்படி 11-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் நவ.11 வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!

rain orange update

நாளை கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்து இருந்தது. சில மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரியில் அதி கனமழை … Read more

டெல்லியில் காற்று மாசுபாடு – பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு..!

Pollution

தலைநகர் டெல்லியில், அடிக்கடி காற்று மாசு அபாயகரமான நிலைக்கு செல்வதுண்டு. அந்த வகையில், டெல்லியில் காற்று மாசுபாடு அபாய அளவை எட்டிய நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், இன்று காலை பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 400க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.  அத்தியாவசியம் இல்லாத கட்டுமானப் பணிகளுக்கு தடை, டீசல் லாரிகள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. திமுக வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை … Read more

பங்காரு அடிகளார் மறைவு – இந்தப் பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Tamilnadu School Students

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதற்கு குருவாக இருந்தவர். பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையை பாராட்டி அவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியது. பங்காரு அடிகளாருக்கு நாளை அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு..! ஆதிபராசக்தி கோயிலில் மாதவிடாய் காலங்களிலும் … Read more

குஷியில் மாணவர்கள்..! இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

Tamilnadu School Students

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு திண்டுக்கல்  மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது, கரூர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக கரூர் ஆட்சியர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

மாண்டஸ் புயல் விடுமுறை எதிரொலி.! நாளை சென்னை பள்ளிகள் செயல்படும்.!

மாண்டஸ் புயல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய நாளை சென்னையில் பள்ளிகள் செயல்படும்.  வங்கக்கடலில் உருவாகி ஓய்ந்த மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு அப்போது விடுமுறைகள் அளிக்கப்பட்டன. தற்போது இதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 9ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய நாளை நவம்பர் 17ஆம் தேதி சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிளமை … Read more

#Rain Breaking: தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு  மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.