பள்ளிக்கல்வி துறையின் பேஸ்புக் பக்கம் ஹேக்.! சினிமா காட்சிகளை பதிவேற்றிய விஷமிகள்

TNDPI: தமிழ்நாட்டு பள்ளிக்கல்வி துறை பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்ட நிலையில் திரைப்பட படங்களின் காட்சிகளை விஷமிகள் அதில் பதிவேற்றம் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறைக்கு என அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் உள்ளது. இது பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் இதை 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர். Read More – பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு! தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு இதில் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த தகவல்கள், மாணவர்களுக்கு … Read more

தமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்..!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுகிறது.  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த  கூட்டத்தில், பள்ளியின் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலின் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத்திட்டங்களில் செயல்பாடு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்த … Read more

தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட உத்தரவு – ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி!

அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவு. அரசுப்பள்ளிகளில் 9,10-ம் வகுப்புகளைத் தொடர்ந்து, 11, 12-ம் வகுப்பிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் இல்லாதது, மாணவர்கள் சேராதது உள்ளிட்ட காரணங்களால் மூடப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், தொழிற்கல்வி பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களே!சற்று நேரத்தில்…10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் – லிங்க் இதோ!

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 20 ஆம் தேதி) வெளியீடு. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே 23 ஆம் தேதியும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 30-ம் தேதியும் முடிவடைந்தது.பிளஸ் 1 பொதுத்தேர்வு மே 31 இல் நிறைவடைந்தது.அதன்பின்,தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ஆம் தேதி தொடங்கியது.அதே சமயம்,தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,ஜூன் … Read more

மாணவர்களே ரெடியா…10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு? – அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 20 ஆம் தேதி) வெளியீடு. தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி ஜூன் 17 ஆம் தேதியும்,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில்,10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. அதன்படி,10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 20-ம் தேதி) வெளியிடப்படும் என்று … Read more