மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இன்று முதல் ஏப்ரல் 21 வரை தொடர் விடுமுறை!

tn schools

TN Schools: தமிழகத்தில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 21 வரை தொடா் விடுமுறை. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்று முடிவு பெற்றது. அதேசமயம் 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 18 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களவை … Read more

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம்!

teachers

TN Govt: அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய உத்தரவு. கடந்த பிப்ரவரி 19 முதல் மார்ச் 8ம் தேதி வரை சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக, திண்டுக்கல் வடமதுரை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியத்தை வலியுறுத்தி 19 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், உரிய அனுமதி இல்லாமல் அரசுக்கு  … Read more

தமிழகத்தில் ஏப்.15- 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

TN SCHOOLS

TN Schools: தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழ்நாட்டில் 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

மாணவர்கள் கவனத்திற்கு! தேர்வு தேதிகளில் மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

SCHOOL STUDENTS

EXAM : தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றம். தமிழகத்தில் மார்ச் 1 முதல் 22ம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதேபோல மார்ச் 4ம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பு தேர்வு 25 தேதியுடன் தேர்வு நிறைவடைந்தது. இதுபோன்று, கடந்த 26ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சூழலில், 1 … Read more

7.72 லட்சம் மாணவர்கள்., 3,300 தேர்வு மையங்கள்… இன்று தொடங்கும் +2 பொதுத்தேர்வு.! 

12th Exam starts Today

12th Exam : இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. மொத்தமாக 7,534 பள்ளிகளில் இருந்து சுமார் 7.72 லட்சம் மாணவர்கள் இன்று தேர்வு எழுத உள்ளனர். இதில் நான்கு 4.13 லட்சம் மாணவியர்கள் 3.52 லட்சம் மாணவர்கள் ஒரு திருநங்கை ஆகியோர் தேர்வு எழுத உள்ளனர். மொத்தம் 3,300க்கும் அதிகமான தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வினை 21,875 தனி தேர்வர்களும், 125 சிறைவாசிகளும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத … Read more

பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்!

school education

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் தமிழக அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வைத்தார். அதில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. … Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

tn school education

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் 35-ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த 2024-25ம் கல்வியாண்டு முதல் அமலாகும் வகையில் தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006ல் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாத 10ம் வகுப்பு மாணவர்கள் விருப்ப பாடத்திலும் தேர்ச்சி … Read more

இந்த இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிடமாற்றம் கிடையாது – பள்ளிக்கல்வித்துறை

DPI

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்தவரையில், அவர்கள் நியமிக்கப்பட்ட பள்ளியில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதன்பின், அவர் மற்ற இடத்திற்கு பணிமாற்றம் வேண்டி விண்ணப்பிக்கலாம். இந்த நடைமுறை தான் தொடர்ந்து காணப்படுகிது. இந்த நிலையில், வட மாவட்டங்களை பொறுத்தவரையில், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளன. இதனையடுத்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களை இங்கு பணியமர்த்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் : நாடாளுமன்றத்தில் தீக்குளிக்க … Read more

உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த பள்ளிக்கல்வித்துறை.!

சென்னையில் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.  சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் கடந்த 27ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் குறைத்து வழங்குபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 6வது ஊதிய குழு அடிப்படியில் மே 2009 முன்பு வேலைக்கு சேர்ந்தவர்களுக்கும், … Read more

மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! 1-5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜன.5-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…!

1-5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜன.5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.  பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் தேர்வுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில், நாளை முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ஆசிரியர்களுக்கு 2-4 ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் இருப்பதால், … Read more