பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் – அன்பில் மகேஷ்

கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது என அமைச்சர் தகவல். கொரோனா பரவல் அச்சம் மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக சுகாதாரத்துறையும், தமிழக அரசும் கொடுக்கும் அறிவுறுத்தலின்படி, பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

#BREAKING: “நம்ம ஸ்கூல்” திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான பிரத்யேக இணையதளத்தையும் சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர். இந்த திட்டம் மூலம் முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிஎஸ்ஆர் நிதியில் பள்ளிகளின் கட்டமைப்பு, ஆய்வகங்கள் … Read more

இவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வகுப்புகள் நடத்த அனுமதி – கல்வித்துறை அறிவிப்பு

சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த கல்வித்துறை அனுமதி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கி கல்வித்துறை அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி வாழங்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அமைச்சர் அறிவித்த நிலையில், கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் எச்சரிக்கையை மீறி, 10,11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரை தினந்தோறும் காலை, மாலையில் 1 மணி … Read more

பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டம் – பள்ளிக்கல்வித்துறை

பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல் வெளியீடு. பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டத்திற்கான புதிய வழிகாட்டுதலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு,  அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. EMIS இணையதளம் அல்லது செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளி கட்டணம் … Read more

#BREAKING: இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் தரும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அடர்நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ள சைக்கிளில் சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளனர். முதற்கட்டமாக ஒரு … Read more

#கனமழை:இன்றும்,நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோவை:வால்பாறையில் இன்றும்,நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக கோவை மாவட்டத்தின் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் (ஜுலை 7),நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு விடுத்துள்ளார். மேலும்,தொடர் மழை பெய்து வருவதால் வாகன … Read more

#Justnow:13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்;மாலை 5 மணிக்குள் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய கடந்த வாரம் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்படி,4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 7,500 ரூபாயிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.12 ஆயிரம் என்ற அடிப்படையில் பணிநியமனங்களை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதற்கு,TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்,இல்லம் தேடி … Read more

குஷியோ குஷி…இன்று கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று(ஜூலை 6 ஆம் தேதி) நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு,கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்ட அரசு அலுவலங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.எனினும்,அவசர கால பணிகளுக்காக மட்டும் மாவட்டத்தில் உள்ள தலைமை அலுவலகம் வழக்கம் போல இயங்கும். மேலும்,இன்றைய உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற ஜூலை 23 ஆம் தேதியன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிசேகமானது … Read more

11-ஆம் வகுப்பு மாணவர்களே ரெடியா…இன்று இந்த நேரத்தில்தான் ரிசல்ட் – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.  தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் முன்னர் வெளியிட்டார்.அதன்படி,தமிழகம்,புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்தனர்.12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய … Read more

11-ம் வகுப்பு மாணவர்களே ரெடியா இருங்க…நாளை காலை 10 மணிக்கு – அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை  வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.  தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் முன்னர் வெளியிட்டார்.அதன்படி,தமிழகம்,புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்தனர்.12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் … Read more