67 மாணவர்கள், 5 ஆசிரியர்கள்! கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள். பள்ளி அளவில் கல்வி, மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் உள்ளிட்ட இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய, மாநில அளவிலும் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 68 பேரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் … Read more

தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் – தமிழக அரசு

தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம் என தமிழக அரசு தகவல். உக்ரைன் போர் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், தமிழக மாணவர்கள் அந்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரால் தமிழகம் திரும்பிய மாணவர்கள் மீண்டும் அங்கு படிப்பை தொடர யாரும் உக்ரைன் செல்லவில்லை எனவும் கூறியுள்ளது. இதனிடையே, உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது. … Read more

#BREAKING: நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் – வெளியானது புதிய தகவல்!

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்பாக புதிய தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். அதன்படி, 12,840 பேரில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி (35%) பெற்றுள்ளனர். விழுப்புரம், விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களில் தேர்வு எழுதிய … Read more

#JustNow: நீட் தேர்வு – தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்கள் 80% பேர் தோல்வி!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படாத நிலையில், 80% பேர் தோல்வி என தகவல். NEET – UG தேர்வு முடிவுகளை நேற்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது. இதில், மருத்துவ இளநிலை படிப்பி சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வில் 17.64 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 56.3% என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வில் … Read more

கல்லூரி, பல்கலை. மாணவர்கள் கவனத்திற்கு – உயர்கல்வி நிறுவனங்களுக்கு, UGC உத்தரவு

சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று UGC உத்தரவு. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறும் பட்சத்தில், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு, UGC உத்தரவிட்டது. சேர்க்கையை ரத்து செய்தால் அவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும், முழுவதுமாக திருப்பியளிக்க வேண்டும் என்றும் சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது. … Read more

பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டம் – பள்ளிக்கல்வித்துறை

பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல் வெளியீடு. பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டத்திற்கான புதிய வழிகாட்டுதலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு,  அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. EMIS இணையதளம் அல்லது செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளி கட்டணம் … Read more

#BREAKING: இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் தரும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அடர்நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ள சைக்கிளில் சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளனர். முதற்கட்டமாக ஒரு … Read more

இலவச மடிக்கணினி திட்டம் ரத்தாகவில்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்தாகவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மடிக்கணினி என்பது பல காலமாக கனவாகவே இருந்து வந்த நிலையில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா … Read more

#Flash:தமிழகம் முழுவதும்…மாதம் ரூ.1,000;3.58 லட்சம் மாணவிகள் விண்ணப்பம் – உயர்கல்வித்துறை!

மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம் மூலம்,பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க 12 ஆம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவியர்கள் கல்லூரியில் சேர்ந்து அவர்களின் படிப்பு முடியும் வரை வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி,மாதம் ரூ.1000 பெரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முன்னதாக ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,ஜூலை 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,மூவலூர் … Read more

#Breaking:225 BE கல்லூரிகளுக்கு திடீர் நோட்டீஸ்;மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி இல்லை – அண்ணா.பல்.கழகம் எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில்,தகுதியான ஆசிரியர்கள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து கல்லூரிகள் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அண்ணா பல்.கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,உரிய விளக்கம் தராத கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு இல்லை என்றும்,மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த பிறகு அதில் 225 கல்லூரிகளுக்கு இத்தகைய உத்தரவை அண்ணா … Read more