#JustNow: நீட் தேர்வு – தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்கள் 80% பேர் தோல்வி!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படாத நிலையில், 80% பேர் தோல்வி என தகவல்.

NEET – UG தேர்வு முடிவுகளை நேற்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது. இதில், மருத்துவ இளநிலை படிப்பி சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வில் 17.64 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 56.3% என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா 720-க்கு 715 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார். முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படாததால், தேர்வு எழுதியவர்களில் 80% மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய 17,000 அரசுப் பள்ளி மாணவர்களில் 80% பேர் தோல்வி அடைந்துள்ளதாகவும், கடந்த கல்வியாண்டில் ( 2021-22 ) அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படாத நிலையில், 80% பேர் தோல்வி என தகவல் கூறப்படுகிறது.

நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 80% பேர் தோல்வியடைந்த நிலையில், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதமும் கடும் சரிவை கண்டுள்ளது. 2020-ல் 57.44%, 2021-ல் 54.40% என்று இருந்த நிலையில், 2022-ல் 51.30% ஆக தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது. தமிழ்நாட்டில், 1,32,167 பேர் நீட் தேர்வு எழுதியதில், 67,787 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment