#BREAKING: தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

புயல், கனமழை எச்சரிக்கையால் தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் இந்த புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புயல், கனமழை எச்சரிக்கையால் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், … Read more

#BREAKING: உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பாணை ரத்து!

உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பாணை ரத்து என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2,331 உதவி பேராசிரியர்களை நியமிப்பது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்தானது. 4000 உதவி பேராசிரியர்கள் காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப 2019 ஆம் ஆண்டில் அறிவிப்பு … Read more

கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்களை நியமிக்க அனுமதி – உயர்கல்வித்துறை

கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு. 2022-23ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அரசு கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், 2022-23ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேச்சு, அரசு கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என அறிவித்தார். இதன்பின் பேசிய அவர், பொறியியல் முதலாமாண்டு சேர்க்கை நவம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறும். அதன்படி, அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார். … Read more

4,000 துணை பேராசிரியர்கள் – அரசாணை வெளியீடு!

4,000 கல்லூரி துணை பேராசிரியர்கள் நியமனம் இன்று வெளியிடப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. தமிழ்நாட்டில் 4,000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கல்லூரி பேராசிரியர்கள் இட மாற்றம் தொடர்பான கலந்தாய்வை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 4,000 துணை பேராசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரி துணை பேராசிரியர்கள் நியமனம் இன்று வெளியிடப்படும். 3,000 காலி பணியிடங்களுக்கு 5,408 பேர் கலந்தாய்வுக்கு … Read more

B.Arch., படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! அக்.8 முதல் கலந்தாய்வு..

பி.ஆர்க் படிப்புக்கு வரும் 8-ம் தேதி முதல் கலந்தாய்வு என அறிவிப்பு. B.Arch., படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ளது. 2,491 பேர் விண்ணப்பித்ததில் 1,651 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,609 இடங்களுக்கு 1,651 பேர் போட்டி நிலவுகிறது. பி.ஆர்க் படிப்புக்கு வரும் 8-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் நிலையில், www.tneaonline.org என்ற இணையதளத்தை அணுகலாம். குறைகளை நிவர்த்தி செய்ய நாளையும், நாளை மறுநாளும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் … Read more

இவர்களும் நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பொறியியல் படிப்புக்கான 3வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. வரும் 13ம் தேதி 3-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது. பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார். மேலும், 8ம் தேதி கலந்தாய்வு ஒரே கட்டமாக நடைபெறும் … Read more

தமிழகத்தில் 41 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றம்..பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்!

ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதற்காக தமிழக அரசு சுமார் ரூ.300 கோடி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக செயல்பட்டு வரும் 41 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி, 41 கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி விடுப்பு செய்யப்படும் என்றும் இனி பல்கலைக்கழகங்களுக்கு பதில் கல்லூரிக் கல்வி இயக்ககமே ஊதியம் & இதர செலவினங்களை வழங்கும் … Read more

B.Ed., படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

B.Ed., படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு. தமிழ்நாட்டில் B.Ed., படிப்புகளில் சேர நாளை முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி,  B.Ed., படிப்புகளில் சேருவதற்கு http://tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அக்டோபர் 6-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 12-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும் கல்லூரிக் … Read more

பேராசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடாது – தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை கைப்பற்றக்கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவு. பேராசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடாது என மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மன அழுத்தத்தில் உள்ள பேராசிரியர்களுக்கு யோகா பயிற்சி தர வேண்டும் என்றும் பேராசிரியர்களின் தேர்வு, நியமனம், ஊதியம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை எக்காரணம் கொண்டும் கைப்பற்றக்கூடாது. … Read more