#BREAKING: நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் – வெளியானது புதிய தகவல்!

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்பாக புதிய தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். அதன்படி, 12,840 பேரில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி (35%) பெற்றுள்ளனர். விழுப்புரம், விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களில் தேர்வு எழுதிய … Read more

#BREAKING: அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1,000 – உயர்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு

வரும் கல்வியாண்டு ( 2022-2023 ) முதல் அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்து தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பினை முடித்தப்பின்னர் உயர்கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த உயர்கல்வி … Read more

7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் ! நல்ல முடிவை ஆளுநர் அறிவிப்பார் – அமைச்சர் ஜெயக்குமார்

7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக அமைச்சர்கள் சந்தித்தனர்.சட்டத்துறை அமைச்சர் சண்முகம்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தனர். இதன் பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில்,  7.5% சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு முதலமைச்சர் … Read more

5 மாநிலங்களில் 80% மாணவர்களுக்கு கல்வி கிடைக்கவில்லை.. ஆய்வில் தகவல்.!

கொரோனா காரணமாக இந்தியாவில் பள்ளிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. பின்னர், ஜூன் மாதத்தில் இருந்து ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.   இந்நிலையில், ஆக்ஸ்பாம் இந்தியா நடத்திய புதிய ஐந்து மாநில கணக்கெடுப்பின்படி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களில் 80% க்கும் அதிகமானோர் ஊரடங்கு காலத்தில் கல்வி கிடைக்கவில்லை  என்று கூறியதாக ஆய்வு தெரிவித்துள்ளது. அதில், பீகாரில் 100% பெற்றோர்கள் இந்த கருத்துக்கு குரல் கொடுத்துள்ளனர். பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் 1,158 … Read more