7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் ! நல்ல முடிவை ஆளுநர் அறிவிப்பார் – அமைச்சர் ஜெயக்குமார்

7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் ! நல்ல முடிவை ஆளுநர் அறிவிப்பார் – அமைச்சர் ஜெயக்குமார்

7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக அமைச்சர்கள் சந்தித்தனர்.சட்டத்துறை அமைச்சர் சண்முகம்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தனர்.

இதன் பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில்,  7.5% சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு முதலமைச்சர் பழனிசாமியின் அறிவுரைப்படி ஆளுநரை சந்தித்தோம் .மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். ஆளுநரின் பரிசீலனையில் உள்ள மசோதாவுக்கு கட்டாயப்படுத்த முடியாது.சமூக நீதியை பாதுகாக்க விரைந்து முடிவு எடுக்குமாறு ஆளுநரிடம் கூறியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube