தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு..!

medical counselling mbbs

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு மாநில அரசே  கலந்தாய்வு நடத்தி  காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக மருத்துவத்துறை அறிவித்துள்ளது. காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு நவம்பர் 7-ஆம் தேதி வரை அகில இந்திய கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நவம்பர் 7 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் tnmedicalselection.org  என்ற இணையதளத்தில் பார்வையிட தேர்வுக்குழு செயலாளர்அறிவுறுத்தியுளளார். அகில இந்திய ஒதுக்கீடு-16, நிகர்நிலைப் பல்கலைக்கழகம்-50, … Read more

தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் – தமிழக அரசு

தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம் என தமிழக அரசு தகவல். உக்ரைன் போர் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், தமிழக மாணவர்கள் அந்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரால் தமிழகம் திரும்பிய மாணவர்கள் மீண்டும் அங்கு படிப்பை தொடர யாரும் உக்ரைன் செல்லவில்லை எனவும் கூறியுள்ளது. இதனிடையே, உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது. … Read more

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் வழக்கு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவு. உக்ரைன் – ரஷ்யா தொடர் போர் காரணமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி இருந்தார்கள். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது, தங்கள் கல்வியை சொந்த நாட்டிலேயே தொடர வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டது. நேற்று உச்சநீதிமன்றத்தில் இந்த … Read more

#BREAKING: உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் கல்வியை தொடர முடியாது – மத்திய அரசு

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய இயலாது.  உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு தளர்வு செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவ படிப்பின் தரத்தினை பாதிக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் இருந்து உக்ரைனில் மருத்துவ படிப்பு பயின்று வந்த மாணவ, மாணவிகள் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக … Read more

நீட் நுழைவுத்தேர்வு – அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வு முகமை. நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடையவிருந்த நிலையில், வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 20-ம் தேதி இரவு 9 மணிக்குள்ளாக https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதனிடையே, நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET UG தேர்வு நடத்தப்படுகிறது. … Read more

#BREAKING: அடுத்தடுத்து அதிர்ச்சி.. செங்கல்பட்டில் 25 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா!

செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு. செங்கல்பட்டில் உள்ள சத்யசாய் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து முதலாமாண்டு வகுப்புக்கு மாணவர்கள் வந்திருந்த நிலையில், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள நிலையில், 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரியில் கடந்த 3ம் தேதி 7 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன்பின் நேற்று மேலும் 18 பேருக்கு … Read more

7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் கனவை நினைவாக்கிய முதல்வருக்கு நன்றி!

7.5% உள் இட ஒதுக்கீடுமூலம் மருத்துவ படிப்பில் இடம் பெற்ற சிவகங்கையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். மருத்துவ கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளியில் பயின்று வரக்கூடிய மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு தருவதற்கான சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தா நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் தற்பொழுது சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் … Read more

தமிழக அரசால் உதவ முடியாவிட்டால் சீட்டு ஒதுக்குங்கள்! மு.க.ஸ்டாலின் ட்வீட்!

தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்கள் இடம் கிடைத்தும் மாணவர்கள் அதனைத் தொடர முடியாத சூழல் நிலவுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், இதன் மூலமாக 405 மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர உள்ளனர்.  இந்த இடஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்த இயலாத நிலையில், உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. … Read more