#கனமழை:இன்றும்,நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோவை:வால்பாறையில் இன்றும்,நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக கோவை மாவட்டத்தின் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் (ஜுலை 7),நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு விடுத்துள்ளார். மேலும்,தொடர் மழை பெய்து வருவதால் வாகன … Read more

மாலை 6 மணிக்கு மேல் இங்கு செல்ல தடை – புலிகள் காப்பக இயக்குனர்

வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து புலிகள் காப்பக இயக்குனர் உத்தரவு. மலைபிரதேசமான வால்பாறையில் இதமான காலநிலை நிலவும். இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதன் காரணமாக வால்பாறை வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம். அவ்வப்போது, வால்பாறையில் சுற்றுலாவை முன்வைத்து சில சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் … Read more

வால்பாறையில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி..!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள மலைப்பிரதேசமான வால்பாறையிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதால் இதனை தடுக்கும் பொருட்டு வெளியில் யாரும் சுற்றித்திரியாமல் பாதுகாக்கும் பணியில் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். வால்பாறையில் உள்ள அரசு கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு 32 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சையை மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர். … Read more

#BREAKING: தேர்தல் பணியில் அலட்சியம் – 3 பேரை சஸ்பெண்ட் செய்த ஆட்சியர்.!

கோவை வால்பாறை தொகுதியில் தேர்தல் பணியில் அலட்சியம் காட்டிய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. கோவையில் வால்பாறை தொகுதியில் தேர்தல் செலவினம் குறித்து அறிக்கையை சரிபார்க்காமல் இருந்த புகாரில் வட்டார வளர்ச்சி அதிகாரி, 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி, காவலர்கள் பிரசாத், குமரவேல் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் செலவின பார்வையாளர் ராம்கிருஷ்ணகேடியா சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையை சார்பார்க்காமல் … Read more

கோடை வெயில் வாட்டி எடுக்காமல் இருக்க வால்பாறைக்கு செல்லுங்கள்

கோடை வந்துட்டாலே உடலில் உள்ள புத்துணர்ச்சி போய் உடலை ஒரு சோர்வு நிலை ஏற்படுவது வழக்கம்.  இத்தகைய நேரங்களில் நம் உடல் ஒரு குளிர்ச்சியான இடத்தை தேடி செல்கிறது. மேலும் இத்தகைய காலகட்டத்தில் குழந்தைகளும் வெப்பத்தின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.இந்த வெயில் காலத்தை சமாளிக்க உதவும் வழிமுறைகளை பார்ப்போம். இந்த கோடை வாட்டத்தில் இருந்து தப்பிக்க வால்பாறைக்கு செல்லுங்கள். வால்பாறை : இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த மலைத்தொடர் … Read more

வால்பறையில் மெல்ல திரும்பியது இயல்புநிலை..!!

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழை சற்று ஓய்ந்ததை அடுத்து, இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருந்தனர். மேலும், மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால், எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, அனைத்தும் சீரானதை அடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. DINASUVADU

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!!

கோவை: கனமழை காரணமாக வால்பறையில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஆக.14)விடுமுறை அளித்து ஆட்சியர் த.ந ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.வால்பறை பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

வழி மறிக்கும் யானை! வாகன ஓட்டுனர்கள் பீதி!

கோயம்புதூர் மாவட்டம் வால்பாறையில் யானை ஓன்று வலம் வருகிறது.அந்த யானை அப்பகுதி வழியாக வரும் வாகனங்களை வழி மறிப்பது வாகனங்களை விரட்டுவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது.இதனால் பீதி அடைந்த வாகன ஓட்டுனர்கள் வனப்பகுதியில் யானையை விரட்ட வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.