ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

டெட் (TET) எனும்  ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் விரைவில் நடைபெற உள்ளது. இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், டெட் (TET) எனும்  ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறந்த கல்வியை வழங்க தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தான் முடியும். சிறந்த கல்வியை பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்கமுடியாது. எனவும் அறிறிவுறுத்தியது சென்னை உயர்நீதிமன்றம்.

!

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment