தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர்ராவின் பேத்தி திருமணத்தின் திருமண செலவு சுமார் ₹100 கோடி!

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவின் பேத்தி திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.இந்த திருமணத்தின்  பொது மணமக்கள் அணிந்திந்திருந்த தங்க, வைர நகைகளின் மதிப்பு ₹ 70கோடி எனவும்,அவரது பேத்தியின் மொத்த திருமண செலவு சுமார் ₹100 கோடிக்கு மேல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.   மகாராஷ்டிராவின் ஆளுநரானா இவர்,தமிழகத்தின் ஆளுநர் ரோசையாவின் பதவிக்கு பிறகு பொறுப்பு ஆளுநராக இருந்தவர்.இவர் இந்தியாவை ஆளும் பாஜகவை சார்ந்தவர் ஆவர்.தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமானவர் ஆவர்.இவரது … Read more

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு!

அடுத்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க AICTE என்ற அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் முடிவு செய்துள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கான அனுமதி கையேட்டை ஏஐசிடிஇ (AICTE) வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில், சராசரியாக 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கையைக் கொண்ட பொறியியல் பாடப் பிரிவுகளுக்கான அனுமதி இடங்கள் பாதியாக குறைக்கப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ர புத்தே தெரிவித்துள்ளார். … Read more

ஆர்.கே.நகரில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது!

ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் கார் கண்ணாடியை உடைத்ததாக, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது.

தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்!

தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்; பணம் கொடுப்பவர், வாங்குபவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலை வந்தால் தீர்வு கிடைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

பிரமோஸ் ஏவுகணை இணைக்கும் பணிகள் தொடங்கியது!

பிரமோஸ் ஏவுகணைகளை, சுகோய் போர் விமானங்களுடன் இணைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக, விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை, அண்மையில் சுகோய் போர் விமானம் மூலம் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து, 40 சுகோய் போர் விமானங்களில் பிரமோஸ் ஏவுகணையை பொருத்துவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் இதற்கான பணிகள் … Read more

திருச்செந்தூர் அருகே கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே  தேரிக்குடியிருப்பில் அமைந்துள்ளது கற்குவேல் அய்யனார் கோவில். தேரிக்குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முன்னொரு காலத்தில் கள்ளர்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாகவும், அப்போது கற்குவேல் அய்யனார், கள்ளர்களை ஊரின் வெளியே விரட்டி சென்று செம்மண் நிறைந்த தேரிக்காட்டு பகுதியில் வெட்டி கொன்றதாகவும் கூறப்படுகிறது. அதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். கள்ளர் வெட்டும் திருவிழாவில் கள்ளன் … Read more

ராமேஸ்வரம் மீனவர்களை கற்கள், பாட்டில்களை கொண்டு தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை!

இராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததோடு கற்கள் மற்றும் பாட்டில்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மீனவர்களின் படகில் ஏறி மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர். … Read more

வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை? ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பெங்களூரு அணியுடன் இன்று மோதல்…

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூரு ஸ்ரீகண்டிவீரா மைதானத்தில் நடைபெறும் ஆடடத்தில் சென்னையின் எப்சி – பெங்களூரு எப்சி அணிகள் மோதுகின்றன. பெங்களூரு எப்சி அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் இன்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி … Read more

புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணற்பரப்பை உருவாக்கும் திட்டம் இறுதிகட்டம்!

புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணற்பரப்பை உருவாக்கும் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. புதுச்சேரியில் கடற்கரை மணற்பரப்பை உருவாக்கும் திட்டம், மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில், 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, தலைமைச் செயலகம் அருகே கடற்கரை ஓரமாக 200 மீட்டர் நீளத்திற்கு, கருங்கற்கள் அடுக்கப்பட்டு, பின்னர் மணலைக் கொட்டி இடம் சமன் செய்யப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட பணியாக, தடுப்புச் சுவர்கள் … Read more

ஈரோட்டில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளருக்கு 8 ஆண்டு சிறை!

ஈரோடு மாவட்டம் கோபியில் மேக்லீன் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இதன் ஆலோசகராக புஷ்பராஜ் இருந்து வந்தார். ஆண்டுதோறும் இல்லத்தின் வரவு-செலவு கணக்கை சார் பதிவாளரிடம் ஒப்புதல் பெற்று, மாவட்ட பதிவாளரிடம் சமர்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இதற்காக, 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சார் பதிவாளராக இருந்த தங்கவேல் என்பவரிடம், புஷ்பராஜ் வரவு செலவு கணக்கை சமர்பித்துள்ளார். ஆனால், ஒப்புதல் அளிக்க தங்கவேல், ரூ.500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில், … Read more