பிரம்மோஸ் ஏவுகணை சோதனையில் தோல்வி! இலக்குத் தவறி கடலில் விழுந்தது..!

450 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனையில் தோல்வி அடைந்துள்ளது. அதனது இலக்கை தவறி கடலில் விழுந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோரில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது. அப்போது அதன் இலக்கை எட்டாமல் ஏவுகணை செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்துள்ளது. இந்த ஏவுகணை 450 கி.மீ இலக்கை தாக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் தோல்வி குறித்த காரணம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ … Read more

எல்லையில்!சீனா போர் விமானங்கள்- புயலென புறப்பட்டது பிரமோஸ்!

எல்லைக்கு அருகில் சீனாவின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உலவுவதை கண்டிக்கும் வகையிலும், பதிலடி கொடுக்கின்ற  வகையிலும்  லடாக் எல்லைக்கு இந்திய ஏவுகணைகள் அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தற்போது தீவிரமடைந்து உள்ளது. கடந்த, ஆறு வாரங்களுக்கும் மேல் இரு தரப்பு ராணுவமும் எல்லையில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் தங்களது படைகளை நிறுத்தி வருகிறது. இந்நிலையில்  பலகட்டமாக நடந்த பேச்சுவார்த்தை முடிவில் இரு நாட்டு படைகளை விலக்கிக் கொள்ள, … Read more

பிரமோஸ் ஏவுகணை இணைக்கும் பணிகள் தொடங்கியது!

பிரமோஸ் ஏவுகணைகளை, சுகோய் போர் விமானங்களுடன் இணைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக, விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை, அண்மையில் சுகோய் போர் விமானம் மூலம் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து, 40 சுகோய் போர் விமானங்களில் பிரமோஸ் ஏவுகணையை பொருத்துவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் இதற்கான பணிகள் … Read more