யுவன் இசையில் கவின் நடிக்கும் புது படத்தின் ஸ்பெஷல் ப்ரொமோ!

Aug 31, 2023 - 07:51
 0  1
யுவன் இசையில் கவின் நடிக்கும் புது படத்தின் ஸ்பெஷல் ப்ரொமோ!

டாடா திரைப்பட வெற்றியை தொடர்ந்து, 'ஸ்டார்' என்ற புதிய படத்தில் ஹரிஷ் கல்யாணுக்குப் பதிலாக நடிகர் கவின் நடிக்கிறார் என்று முன்பு கூறப்பட்டது. தற்போது, அது உறுதியாகி இருக்கிறது, தயாரிப்பாளர்கள் யுவனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் சிறப்பு ப்ரோமோவை வெளியிட்டனர்.

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ப்ரோமோவில்,  ஒரு கலைஞரின் டிரஸ்ஸிங் டேபிளைக் காட்டி தொடங்குகிறது. மேலும், அதில் ஸ்பாட்லைட்கள், கேமரா மற்றும் ஸ்கிரிப்ட் பேப்பர்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ப்ரோமோ கவின் கதாநாயகனாக நடிக்கும் அறிமுகத்தை காட்டுகிறது.

குறிப்பாக அதில் "நூறாயிரம் பாதங்கள் என்னை மிதித்து நின்றாலும், ஓராயிரம் யானை பலம் கொண்டு உதறி எழுந்து நிற்பேனே" என்ற வசனங்களில், கவினின் பின்னணி குரலில் உருவாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கதைக்களத்தைப் பற்றி எலன் பேசுகையில், ​​ஸ்டார் படம் ஒரு கல்லூரிக் கதை, காதல் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்தையும் கலந்ததாக இருக்கும். மும்பை மற்றும் சென்னையில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்டது. டாடா படத்தில் பணிபுரிந்த எழில்அரசு ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பைக் கையாளுகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow