தடைகளை தாண்டி வெளியான "பிச்சைக்காரன் 2" திரைப்படம் எப்படி இருக்கு..? டிவிட்டர் விமர்சனம் இதோ..!!

May 19, 2023 - 05:18
 0  1

இன்று வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. 

பிச்சைக்காரன் 2 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிச்சைக்காரன் முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், trp ரீதியாகவும் பல சாதனைகளை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகமும் வெளியாகியுள்ளது.

[caption id="attachment_645586" align="aligncenter" width="1311"] Pichaikkaran2FromToday [Image Source : Twitter/@v4cinema][/caption]

இந்த இரண்டாவது பாகத்தை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி தானே ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

[caption id="attachment_645587" align="aligncenter" width="1068"] Pichaikkaran2FromToday [Image Source : Twitter/@OnlyKollywood][/caption]

படம் பல தடைகளை தாண்டி ஒரு வெளியாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அதனை தொடர்ந்து படத்தின் கதை திருட்டு கதை என கூறி சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் ஒரு வழியாக இறுதியில் இன்று படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

டிவிட்டர் விமர்சனம் 

படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் " பிச்சைக்காரன்2  முதல் பாகத்தின் தொடர்ச்சியில்லை. இரண்டும் தனித்தனி படம். இருந்தாலும் பொருத்தமான தலைப்பு. குழந்தைகள் காட்சிகள் அருமை . VFX மோசமாக இருக்கிறது.   திரைக்கதை சற்று மந்தமானது.பிகிலி எதிர்ப்பு யோசனை அருமை, முழுப் படத்திலும் 1/2 காட்சிகள் சுவாரசியமானதாக இருக்கிறது . விஜய் ஆண்டனி அறிமுக இயக்குனர். மொத்த ஏமாற்றம்" என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் " பிச்சைக்காரன் 2 மிகவும் சிறப்பாக உள்ளது. குழந்தைகளை கடத்துவது, மூளை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பேராசை கொண்டவர்கள் மக்களை ஏழைகளாக வைத்திருப்பது பற்றிய செய்தியை கூறுகிறது" என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் " பிச்சைக்காரன் படம் பெரிய அளவிற்கு இல்லை. 'பிளேயிங் டு தி கேலரி' பகுதி அதிகமாகச் செய்யப்பட்டுள்ளது, 'ஆன்ட்டி பிகிலி' கான்செப்ட் மற்றும் எக்ஸிகியூஷன் சிரிக்க வைக்கிறது. சரியான கதை இல்லை, இயக்கம் சரியாக இல்லை" என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் " விஜய்ஆண்டனி தெள்ளத்தெளிவாக இருக்கிறார். அவரது திறமைகள் குறைவாக இருந்தாலும், மீண்டும் தனக்கு ஏற்ற ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுத்தார்.இது போன்ற ஒரு திரைப்படத்திற்கான தயாரிப்பு மதிப்புகள் மிக உயர்ந்ததாக இருக்கும்.ஸ்கிரீன் அவுட் ஆஃப் பார்க், இது முதல் பாதியை மிகவும் ஈர்க்கக்கூடியதாக ஆக்குகிறது.நிறைய VFX பயன்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இது பட்ஜெட்டுக்கு ஏற்றது.சுவாரஸ்யமான முதல் பாதிக்குப் பிறகு, கதை வழக்கமான  படங்களின் கதையில்  செல்கிறது.இரண்டாம் பாதியில் இழுத்தடிக்கும் காட்சிகள் அதிகம் இருக்கிறது. படம் சுமார்" என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow