10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வந்த பிஸ்டோரியஸ்..!

Jan 6, 2024 - 07:27
 0  2
10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வந்த பிஸ்டோரியஸ்..!

கடந்த 2013-ஆம் ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி ‘பிளேட் ரன்னர்’ என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க மாற்று திறனாளி தடகள வீரர் பிஸ்டோரியஸ் தனது சொந்த வீட்டிலேயே காதலி ரிவா ஸ்டீன்காம்பை சுட்டுக் கொன்றார். திருடன் என்று தவறாக நினைத்து தான் காதலி மீது துப்பாக்கியால் சுட்டதாக பிஸ்டோரியஸ் காவல்துறையிடம் கூறினார். இந்த கொலை சம்பவம் உலகையே அதிர வைத்தது.

இந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடந்த முதல் விசாரணையில் பிஸ்டோரியஸ் குற்றமற்ற கொலைக்குற்றவாளி என  ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 3 டிசம்பர் 2015 அன்று, தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்றம் பிஸ்டோரியஸ் கொலைக்குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் வழக்கறிஞர்களால் கோரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் 2017ல் உச்சநீதிமன்றம் அவரது தண்டனையை 13 ஆண்டுகளாக உயர்த்தபட்டது.  இதற்கிடையில் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் பரோல் கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் -க்கு ஜனவரி 5-ம் தேதி முதல்  பரோல் வழங்க அனுமதி வழங்கியது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்கார் பிஸ்டோரியஸ் சிறையில் இருந்து நேற்று பரோலில் வெளியே வந்தார்.

6 முறை தங்கப்பதக்கம்:

ஆஸ்கார் பிஸ்டோரியஸ் கார்பன் ஃபைபரால் செய்யப்பட்ட செயற்கை கால்களுக்காக ‘பிளேட் ரன்னர்’ என்று அழைக்கப்படுகிறார். பாராலிம்பிக்கில் 6 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பிஸ்டோரியஸ் காதலி  ரீவா ஸ்டீன்காம்ப் ஒரு தென்னாப்பிரிக்க மாடல் ஆவார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow