NIARaid: சென்னையில் என்ஐஏ சோதனை நிறைவு!

Sep 16, 2023 - 07:13
 0  2
NIARaid: சென்னையில் என்ஐஏ சோதனை நிறைவு!

தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 30 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக சென்னை, கோவை, தென்காசியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்பட்டது.  அதாவது, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் மற்றும் ஆட்சேர்ப்பு வழக்கில் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் 30 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி, தமிழகத்தில் கோவையில் 21 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களிலும், தென்காசியில் ஒரு இடத்திலும் என்ஐஏவின் தனிப்படையினர் சோதனை நடத்தினர். தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் ஐந்து இடங்களில் ஏஜென்சி சோதனை நடத்தியதாக தெரிவித்தன. கோயம்புத்தூரில் சந்தேக நபர்களுடன் தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் மாட்யூல் பற்றிய புதிய ஆதாரங்களைத் தொடர்ந்து இந்த வழக்குடன் தொடர்புடைய நபர்களின் வளாகத்தில் சோதனை நடத்தப்படுவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் 2 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நிறைவு பெற்றது. வரும் 20ம் தேதி புரசைவாக்கம் என்ஐஏ அலுவலகத்தில் முஜிபூர் ரகுமான், ஐக்கிறியா ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, கோவையில் என்ஐஏ சோதனை நிறைவடைந்த நிலையில், சென்னையிலும் சோதனை நிறைவு பெற்றுள்ளது. இதனிடையே, கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி உக்கடத்தில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முபினின் உறவினர்கள், நண்பர்கள், அவருடன் தொடர்புடையவர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவ்வப்போது, இதுதொடர்பாக சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று தமிழகம் முழுவதும் இன்று 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது. தற்போது ,சென்னை, கோவையில் என்ஐஏசோதனை நிறைவு பெற்றுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow