சூடான் மோதலில் 400க்கும் மேற்பட்டோர் பலி...ஹெல்ப்லைன் எண்னை வெளியிட்ட அரசு.!!

Apr 24, 2023 - 06:46
 0  2

சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

சூடானில் ராணுவ மோதல் :

சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த வாரத்தில் இருந்தே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலில், துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலமும் பயங்கரமாக தாக்குதல் நடந்து வருகிறது.

400-க்கும் மேற்பட்டோர் பலி 

சூடானில் நடைபெற்ற மோதலில் நேற்றுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,351 பேர் காயமடைந்துள்ளதாகவும் (WHO)உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இறந்தவர்களில் 9 குழந்தைகளும் அடங்கும். தாக்குதலால் குறிப்பாக மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்கள் சிகிச்சை பெற முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஹெல்ப்லைன் எண்

சூடானில் சிக்கித் தவிக்கும் குடிமக்களின் உதவிக்காக மத்தியப் பிரதேச அரசு முதலமைச்சரின் ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டுள்ளது. சூடானில் சிக்கியுள்ள மத்தியப் பிரதேசம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த குடிமக்களுக்கு உதவ மத்தியப் பிரதேச அரசு முதல்வர் ஹெல்ப்லைனைத் தொடங்கியுள்ளது. சூடானில் சிக்கித் தவிக்கும் மாநில மற்றும் வெளி மாநில குடிமக்கள் ஹெல்ப்லைன் எண்ணை (+917552555582) தொடர்பு கொள்ளலாம். அதைபோல், (www.cmhelpline.mp.gov.in) இணையதளத்தின் மூலம் புகார் அளிக்களாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow