மிக்ஜாம் புயல் நிவாரண வழக்கு - விசாரணைக்கு ஏற்க மறுப்பு..!

Jan 12, 2024 - 06:22
 0  1
மிக்ஜாம் புயல் நிவாரண வழக்கு - விசாரணைக்கு ஏற்க மறுப்பு..!

மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.8,000 கோடி வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவுவிட கோரிய  வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் மழையால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் ரூ.8,000 கோடி  நிவாரண நிதியாகவும், இடைக்கால நிவாரணத் தொகையாக ரூ.3000 கோடியை வழங்கிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரையை சார்ந்த ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்தார்.

அமோனியம் வாயு கசிவு…இழப்பீடு வழங்க முடிவு..?

இந்த பொதுநலமனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,  தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பாக ஏதேனும் கோரிக்கை இருந்தால் தமிழக அரசு உரிய கோரிக்கை மத்திய அரசிடம் முறையிடலாம் என தெரிவித்து பொதுநல வழக்கு தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow