மத்தி மீன் குழம்ப இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க ...டேஸ்ட் சும்மா அள்ளும்....!

Jan 12, 2024 - 07:45
 0  0
மத்தி மீன் குழம்ப இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க ...டேஸ்ட் சும்மா அள்ளும்....!

அசைவ உணவுகளில் மட்டன் சிக்கனை விட மீனில் சற்று அதிகம் ஆரோக்கியம் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக மத்தி மீனில் நம் உடலுக்கு தேவையானஅதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. மத்தி மீனை ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு ஸ்டைலில் செய்வோம் அந்த வகையில் மத்தி மீனை இன்னும் சுவையூட்டும் வகையில் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் = 4ஸ்பூன் கடுகு= ஒரு ஸ்பூன் வெந்தயம் =ஒரு ஸ்பூன் சீரகம் =அரை ஸ்பூன் மிளகு= அரை ஸ்பூன் பூண்டு= பத்து பள்ளு சின்ன வெங்காயம்= 20 தக்காளி= மூன்று பச்சை மிளகாய் =4 புளி  தேவைக்கு ஏற்ப மிளகாய்த்தூள் =3 ஸ்பூன் மல்லி தூள்= நான்கு ஸ்பூன் மஞ்சள் தூள்= ஒரு ஸ்பூன் மீன்= ஒரு கிலோ

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு பொரிந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும், தனியாக ஒரு பாத்திரத்தில் புளியை  தேவையான அளவு எடுத்து ஊற வைத்து தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து அதிலே மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் ,மஞ்சள் தூள்  சேர்த்து கலந்து உப்பும் சேர்த்து வைத்துக் கொள்ளவும். தக்காளி வதங்கியவுடன் இந்த கலக்கிய கரைசலை சேர்த்து விடவும். இந்த கரைசல் நன்கு கொதித்து வந்ததும் பூண்டையும் தட்டி போடவும்.

குளிர்காலத்தில் ஏற்படும் இதயப்பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்..?

ஒரு பாத்திரத்தில் மிளகு, சீரகம் ,வெந்தயம் மூன்றையும் பொன்னிறமாக வறுத்து பொடித்து  கொள்ளவும். குழம்பு நன்றாக கொதிந்த உடன் மீனையும் சேர்த்து அதிலே பொடித்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி விடவும் குழம்பிலே மீன் சேர்த்த பிறகு தீயை மிதமான தீயில் வைக்க வேண்டும் அப்போதுதான் மீன் கரையாது. மீன் வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும் இப்போது சுவையான மத்தி மீன் குழம்பு. ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க அப்புறம் ஒவ்வொரு முறையும் இப்படியே செஞ்சு சாப்பிடணும்னு தோணும்.

நன்மைகள் 

மத்தி மீனில் தசை வளர்ச்சிக்கு தேவையான புரதம் அதிக அளவில் உள்ளது அதுமட்டுமல்லாமல் அதிக அளவு கால்சியம் உள்ளது இது நம் எலும்புகளை வலுப்படுத்தும்.

ஒமேகா 3 பேட்டி ஆசிட் ஒரு சில குறிப்பிட்ட உணவு வகைகளிலே இருக்கும் அந்த வகையில் மத்தி மீனில் மற்ற மீன்களை விட சற்று அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஒமேகா 3பேட்டி ஆசிட்  கண் நோய்கள் வராமல் பாதுகாக்கிறது முடியில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும். மேலும் இதய நோய் வருவதை தடுக்கிறது. விட்டமின் பி12 சத்தும் இந்த மத்தி மீனில் உள்ளது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் மத்தி மீனை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும் இதில் உள்ள அயோடின் சத்து முன் கழுத்து கழலை  நோய் ஏற்படுவதை தடுக்கிறது.

ஆகவே நாம் மறந்தும் மத்தி மீனை விடாமல் வாரம் ஒரு முறையேனும் உணவில் சேர்த்துக்கொண்டு அதில் உள்ள சத்துக்களை பெறுவோம் .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow