நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கவில்லை என்றால் இத்தனை பாதிப்புகளா?

திதி என்பது நம் இறந்தவர்களுக்கு செய்யும் முறையாகும் சிலர் இதை முறையாக செய்வதில்லை .அதனால் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். திதியை எவ்வாறு செய்வது மற்றும் திதி கணக்கிடும் முறை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

திதி கொடுக்கவில்லை என்றால் என்ன பிரச்சனை வரும் தெரியுமா?

திதி கொடுக்கவில்லை என்றால் இறந்தவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ,ஆனால் உயிரோடு வாழும் தலைமுறையினருக்கு நிறைய பிரச்சனைகள் வரும் குறிப்பாக குழந்தை பேரு கிட்டாமல்  போகும் அப்படியே பிறந்தாலும் ஊனமுற்ற குழந்தைகளாகவோ ,மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவோ இருப்பார்கள், திருமண தடை ஏற்படும், நிம்மதி இல்லாமல் போகும், குடும்பத்தில் ஒரு முன்னேற்றமே இல்லாமல் இருக்கும் இவ்வளவுக்கும் காரணம் பூர்வ புண்ணியம் இல்லாத நிலைதான் பித்ரு தோஷம் எனக் கூறுவார்கள், இதை மிகைப்படுத்துவதற்காக கூறவில்லை இதுவே நிதர்சனமான உண்மையாகும்.

திதி கணக்கிடும் முறை

திதி கணக்கிடும் முறை என்பது ஒருவர் இறந்த முதல் வருடம் ஆகும். ஒருவர் இறக்கும்போது எந்த திதியில் இறந்து விட்டார் அதாவது வளர்பிறை திதியா  அல்லது தேய்பிறை திதியா  என தெரிந்து வைத்திருக்க வேண்டும் பிறகு தமிழ் மாதத்தில் தான் திதியை கொடுக்க வேண்டும் அதாவது ஒருவர் ஏப்ரல் மாதம்வளர்பிறை அஷ்டமி திதியில் இறந்து விட்டார் என்றால் அந்த ஏப்ரல் மாதம் அஷ்டமி எப்போது வரும் என்று பார்க்கக் கூடாது. அது பங்குனியில் வருகிறதா இல்லை சித்திரையா என பார்க்க வேண்டும் அதாவது அவர் இறந்த தமிழ் மாதம் மற்றும் வளர்பிறை திதியா  என்றுதான் கணக்கிட வேண்டும்.

சில திதிகள் இன்று பாதியும்  அடுத்த நாள் பாதியும் வரும் அவ்வாறு வந்தால் சூரியன் ஏறுபொழுது இருக்கும்போது மட்டுமே திதி செய்ய வேண்டும் இறங்கும் பொழுதில் செய்யக்கூடாது. ஒருவேளை சந்தேகம் இருந்தால் அருகில்  பஞ்சாங்கம் பார்க்கக் கூடியவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு செய்ய வேண்டும்.

திதி கொடுக்கும் சிறந்த முறை

திதி கொடுக்க பல வகைகள் உள்ளது. அந்தனரை  வீட்டிற்கு அழைத்து பிண்டம் வைத்து திதி கொடுக்கலாம் இதுவே சிறந்த முறையாகும். இவ்வாறு செய்ய முடியாதவர்கள் இறந்தவரின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்த உணவுகளை வைத்து திதி கொடுக்கலாம். இதுவும் செய்ய முடியவில்லை என்றால் சமைப்பதற்கு உண்டான அனைத்து பொருட்களையும் வாங்கி ஒரு நபருக்கு தானமாக கொடுக்கலாம். இதுவும் செய்ய முடியவில்லை என்றால் கோவிலுக்கு சென்று திதி கொடுக்கலாம் உங்களால் முடிந்த பணத்தை ஒருவருக்கு தானமாக கொடுக்கலாம் இதுவும் செய்ய முடியவில்லை என்றால் வெறும் எள்ளும் தண்ணீரும் காசி கயாவை நினைத்து இறைக்கலாம். இந்த எள்ளு இரைப்பதை பெண் பிள்ளைகள் செய்யக்கூடாது. இதை தவிர்த்து மேலே கூறிய வேறு முறைகளை செய்யலாம்.

இதில் ஏதேனும் ஒன்றாவது பின்பற்ற வேண்டும் அப்படி பின்பற்றினால் தான் நமக்கு நற்பலன்கள் கிடைக்கும். இறந்தவர்கள் ஆன்மா ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நம்மைத் தேடி வரும் அதாவது அம்மாவாசை, அவர்கள் இறந்த நாள் போன்ற தினங்களில் வரும் அவ்வாறு வரும்போது அவர்களுக்கு பிடித்ததை செய்தால் அதை நிறைவாக பெற்று மனதார வாழ்த்தி போவார்கள் .இவ்வாறு நாம் வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டும்.

சிலருக்கு தோணும் வருடம் வருடம் தான் செய்கிறோம் ஆனால் நிம்மதி இல்லை என்று நினைப்பீர்கள். நாம் செய்வதை மனதார அவர்களை நினைத்து அன்போடும் கரிசனையோடும் செய்ய வேண்டும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது மனதில் தவறாக அவர்களை நினைத்துக் கொண்டு சாப்பாடு போட்டால் அது அவர்களுக்கு தெரியாமல் போய்விடும் ஆனால் அவர்கள் ஆன்மாவாக இருந்தால் நமது எண்ணமே காட்டிவிடும். ஆகவே திதி கொடுக்கும் போது பயபக்தியுடன் கொடுக்க வேண்டும். அன்போடும் கரிசனையோடும் இல்லாமல் வைக்கும் பிண்டத்தையோ அல்லது  திதியவோ அந்த ஆன்மா ஏற்றுக் கொள்ளாது, அதற்கு பதிலாய சாபமாக மாறிவிடும். ஆகவே நாம் இறந்தவர்களுக்கு செய்யும்போது மனதார முழு அன்போடு செய்தோமானால் அவர்களின் அருளும் ஆசியும் நிச்சயம் பெறலாம்