மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை..! ரூ.1.35 கோடி டெண்டர் ஒதுக்கீடு..!

Mar 26, 2023 - 07:11
 0  2

மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.35 கோடி டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னையைத் தொடர்ந்து மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கான அறிக்கை தயாரிக்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கு 4 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான செயல் திட்ட அறிக்கை தயாரிக்க ஆர்.வி. அசோசியேட் நிறுவனத்துக்கு ரூ.1.35 கோடிக்கான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை அமைக்க உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே 18 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ சேவை வழங்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்ட நிலையில் மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கான அறிக்கை தயாரிக்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow