சவரனுக்கு ரூ.360 உயர்ந்த தங்கம் விலை ..! இன்றைய நிலவரம் என்ன ..?

Mar 19, 2024 - 05:37
 0  0
சவரனுக்கு ரூ.360 உயர்ந்த தங்கம் விலை ..! இன்றைய நிலவரம் என்ன ..?
Gold Silver Price [file image]

Gold Price: சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது.

Read More :- தேர்தல் பரப்புரை ஸ்டார்ட்ஸ்…. முதல்வர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ் பிரச்சார அட்டவணை…

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். நேற்றைய நாளில் தங்கத்தின் விலையானது குறைந்து விற்பனையான நிலையில் தற்போது இன்றைய நாளில் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது.

Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ…

சென்னையில் (19.03. 2024) இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.49,080-க்கும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,115-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்றைய விலையிலிருந்து 30 காசுகள் உயர்ந்து கிராமுக்கு ரூ.80.30-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்றைய விலையிலிருந்து ரூ.300 உயர்ந்து ரூ.80,300-க்கு விற்பனையாகிறது.

Read More –  மீண்டும் ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின்… வரலாற்று வெற்றி!

சென்னையில் (18.03. 2024) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48,720-க்கும் கிராமுக்கு ரூ.6,070-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.80.00-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்றைய விலையிலிருந்து ரூ.300 உயர்ந்து ரூ.80,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow