ராம நவமியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தை விடுமுறை..!

ராம நவமி பண்டிகையை முன்னிட்டு சென்செக்ஸ், நிஃப்டி இன்று விடுமுறை.

ராம நவமி, அதாவது இராமனின் பிறந்த நாளைக் கொண்டாடும் பண்டிகையை முன்னிட்டு இன்று (வியாழன்) தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை வர்த்தகங்கள் மூடப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) பங்குச் சந்தை வர்த்தகம் மீண்டும் தொடங்கும்.

நேற்றைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 346 புள்ளிகள் அல்லது 0.60% என அதிகரித்து 57,960 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 129 புள்ளிகள் அல்லது 0.76% அதிகரித்து 17,080 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

இந்திய பங்குச்சந்தையின் இந்த எழுச்சி அதானி குழுமப் பங்குகள் மற்றும் பல நிறுவனங்களின் லாபத்திற்கு வழிவகுத்தது. இந்த நிதியாண்டின் கடைசி சந்தை விடுமுறை மார்ச் 30 ஆகும். ஏப்ரல் 4, ஏப்ரல் 7, ஏப்ரல் 14 மற்றும் ஏப்ரல் 21 ஆகிய நான்கு தேதிகள் பங்குச்சந்தை சந்தை விடுமுறைகளைக் கொண்டிருக்கும்.

Leave a Comment