Monday, June 3, 2024

தசரா திரைப்படம் எப்படி இருக்கு..? டிவிட்டர் விமர்சனம் இதோ.!

நடிகர் நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள “தசரா“ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

Dasara
Dasara [Image Source : Twitter]

இந்த திரைப்படத்திற்கு இசையமையைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  இந்நிலையில், இன்று பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம். கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

“தசரா ஒரு அற்புதமான வணிக நடவடிக்கை நாடகம். நானி தனது மிகவும் பாதிக்கப்படக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தன்னை புதுப்பித்துக் கொண்டார். கீர்த்தி சுரேஷ் ஒரு சிறந்த பாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் எனது திரையிடலில் பலத்த கைதட்டல்களைப் பெற்றார். ஒடேலா ஸ்ரீகாந்த் இது உங்களின் முதல் பட நாயகன் என்பதை நம்ப முடியவில்லை”

படத்தை பார்த்த ஒருவர் ” தசரா படம் அருமை. கிராமப்புற பின்னணி அமைப்பு & மேக்கிங் குட். நானியின் நடிப்பு அருமை.  கீர்த்தி சுரேஷும் அருமையாக நடித்திருக்கிறார். மெதுவான ஆரம்பம், பயங்கர இடைவேளையின் போது படம் உச்சத்தை எட்டியது. ஆனால் இரண்டாவது பாதி சுமார்.  க்ளைமாக்ஸ் சண்டை நன்றாக இருந்தாலும், அது மிகவும் தாமதமானது.” என பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES