ENGvAFG : இங்கிலாந்து பவுலர்களை மிரள விட்ட ரஹமானுல்லா.! 284க்கு ஆப்கானிஸ்தான் ஆல்அவுட்.!  

Oct 15, 2023 - 12:42
 0  1
ENGvAFG : இங்கிலாந்து பவுலர்களை மிரள விட்ட ரஹமானுல்லா.! 284க்கு ஆப்கானிஸ்தான் ஆல்அவுட்.!  

2023 உலக கோப்பை லீக் தொடரின் 13வது போட்டி இன்று நடைபெறுகிறது. ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியானது டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

 இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் வீரர்கள் பேட்டிங்கிற்கு தயாராகி களம் கண்டனர். கடந்த போட்டிகளில் இங்கிலாந்து  நியூசிலாந்துடன் தோல்வியும், வங்கதேசத்துடன் ஒரு வெற்றியும் பெற்றுள்ளது. அதே போல ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசம் மற்றும் இந்தியா என இரு அணிகளுடனும் விளையாடி தோல்வியை சந்தித்துள்ளது. காயம் காரணமாக விலகிய தசுன் சனகா.! இலங்கை அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு.!

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி கண்டதால், இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எப்படியும் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ஆப்கான் வீரர்கள் களமிறங்கினர். எதிர்பார்த்தது போலவே, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய  ரஹ்மானுல்லா குர்பாஸ் 54 பந்துகளுக்கு  8 பவுண்டரி, 4 சிக்ஸர் விளாசி 80 ரன்கள் எடுத்து இருந்தார். ஆனால் உடன் விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.

இக்ரம் அலிகில் மட்டும் ரஹ்மானுல்லாவுக்கு ஈடு கொடுத்து 58 ரன்கள் எடுத்தார். இப்ராஹிம் சத்ரான் 28 ரன்களும், ரஹ்மத் ஷா  3 ரன்களும், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 14 ரன்களும், அஸ்மத்துல்லா உமர்சாய் 19 ரன்களும், முகமது நபி 9 ரன்களும், ரஷீத் கான் 23 ரன்களும், முஜீப் உர் ரஹ்மான் 28 ரன்களும் நவீன்-உல்-ஹக் 5 ரன்களும், ஃபசல்ஹா 2 ரன்களும் எடுத்து இருந்தனர்.

இறுதியில் 49.5 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 284 ரன்கள் எடுத்துஇருந்தனர். இங்கிலாந்து அணி சார்பாக அடில் ரஷித் 3 விக்கெட்களையும், மார்க் வூட் 2 விக்கெட்களையும் ,  ஜோ ரூட், லியாம் லிவிங்ஸ்டன். ரீஸ் டாப்லி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்து இருந்தனர்.

50 ஓவரில் 285 ரன்கள் எடுத்து இருந்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி அடுத்து களமிறங்க உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow