இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர்... நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை!

Mar 11, 2024 - 06:56
 0  0
இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர்... நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை!

MK Stalin : தருமபுரி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு ரூ.560.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Read More - தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம்? பிடிவாதம் பிடிக்கும் பிரேமலதா!

அதுமட்டுமில்லாமல், ரூ.114.19 கோடி மதிப்பில் 75 திட்ட பணிகளுக்கு அடிக்கலும் நாட்டி வைத்தார். அதேசமயம், ரூ.350.50 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 993 திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இதன்பின் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, இவ்விழா என்பது சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான முத்தான விழா.

மூன்று முத்துத்தான அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோரின் பணிகள் இதில் அடங்கி உள்ளது. இவர்கள் கட்சி பணி, ஆட்சி பணி ஆகிய இரண்டையும் சிறப்பாக செய்யக்கூடியவர்கள். அதியமான் ஆட்சி செய்த தகடூர் தான் தருமபுரி மண். தருமபுரி என்றால் என் நினைவுக்கு வருவது ஒகேனக்கல் தான். இதனால் தருமபுரி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்ற மகிழ்ச்சியில் இங்கு நிற்கிறேன்.

Read More - திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஏன்.? திருமா விளக்கம்…

அவ்வைகியின் வரலாற்றில் தருமபுரிக்கு எப்படி பங்கு இருக்கிறதோ, அதுபோல் தமிழ்நாட்டில் மகளிர் முன்னேற்றத்திலேயும் தருமபுரிக்கு முக்கிய பங்கு உண்டு. மகளிர் சுய உதவிக்குழுக்கள் இங்கு தான் தொடங்கப்பட்டது. அதுபோன்ற கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் முகாமும் இங்கு தான் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களும் மகளிர் வாழ்க்கையில் ஒளிவிளக்காக இருந்து வருகிறது.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை திட்டம் என்பது பெண்களுக்கு திமுக அரசு வழங்கிய மிகப்பெரிய அதிகார கொடையாக உள்ளது. பொருளாதார அதிகாரம் உள்ளவர்களாக பெண்களை மாற்றி இருக்கிறோம். உரிமைத்தொகை பெற்ற பெண்கள், இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர் என கூறுகின்றனர். 2 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 28 லட்சம் இளைஞர் திறன் பயிற்சி பெற்றுள்ளனர்.

Read More - Oscar 2024 : 10 விருதுக்கு பரிந்துரை! ஆனா ‘Killers Of The Flower Moon’ படத்துக்கு ஒரு விருது கூட இல்லை!

எனவே, திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட வேண்டுமென்றால் நாள் முழுவதும் பேச வேண்டும் என்றார். மேலும், 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சுரண்டியவர்களால் திமுக போல் திட்டங்களை செயல்படுத்த முடிந்ததா. திமுக அரசு போல மக்கள் நலத்திட்டங்களை அதிமுக-வால் பட்டியலிட முடியுமா எனவும் கேள்வி எழுப்பிய முதல்வர், திமுக கொண்டு வந்த ஒகேனக்கல் திட்டத்தை முடக்கியது தான் அதிமுகவின் சாதனை எனவும் விமர்சித்தார்.

வாச்சாத்தி கொடுமையை யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள். எந்த ஆட்சியில் நடந்தது என்பதையும் மறந்து இருக்க மாட்டீர்கள் என குறிப்பிட்டு, திமுக அரசின் திட்டங்களை எடுத்துரைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெறும் கையில் பிரதமர் மோடி முழம் போடுகிறார் என்று விமர்சனத்தை முன்வைத்து, மத்திய அரசு மாநில அரசுகளின் நிதி ஆதாரத்தை பறித்து அழிக்க பார்க்கிறது எனவும் குற்றசாட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow