பாண்டியாவுக்கு இப்படி ஒரு எதிர்ப்பா.? மோசமாக ட்ரெண்டாகும் 'RIPHARDIKPANDIYA' !

Mar 19, 2024 - 07:43
 0  0
பாண்டியாவுக்கு இப்படி ஒரு எதிர்ப்பா.? மோசமாக ட்ரெண்டாகும் 'RIPHARDIKPANDIYA' !
Mumbai Indians Captain Contreversy [file image]

IPL 2024 : ஐபிஎல் 2024 தொடர் மார்ச்-22 அன்று வருகிற வெள்ளிக்கிழமை அன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவும், மும்பை அணியின் தலைமை பயிற்சியாளரான மார்க் பவுச்சரும் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். இந்த செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி சமூக ஊடகங்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. மேலும், ஹர்திக் பாண்டியாவையும் சமூக வலைத்தளத்தில் திட்டி வருகின்றனர்.

Read More :- ‘ ரவுண்ட் நெக் ..வைட் T-ஷர்ட் .. ‘ பெங்களூரு வந்தடைந்தார் விராட் கோலி ..!

ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பாகவே மும்பை அணியில் பலவித குழப்பங்கள் ஏற்பட்டது. அதில் ஒன்று தான் ரோஹித் ஷர்மாவை மும்பை அணி கேப்டன் பதவிலியிருந்து விலக்கி அதற்கு பதிலாக ஹர்டிக் பாண்டியவை மும்பை அணியின் கேப்டனாக நியமித்தது. கடந்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட ஹர்டிக் பாண்டியவை காண்ட்ராக்ட் (Contract) மூலம் மும்பை அணிக்காக விளையாட மும்பை அணி நிர்வாகம் எடுத்தது.

Read More :- IPL 2024 : தொடரும் சோகம் ..! சி.எஸ்.கே அணிக்கு 3-வது இடி !

அந்த சமயம் ஹர்டிக் பாண்டியா தனக்கு கேப்டன் பதவி கொடுத்தால் மட்டுமே மும்பை அணிக்காக விளையாடுவேன் என்று கூறியதால் அவருக்கு மும்பை அணியின் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு அவரை மும்பை அணிக்கு எடுத்தனர் என்று அரசல் புரசலாக ரசிகர்கள் பேசி வந்தனர். தற்போது, அதனை உறுதி படுத்தும் வகையில் ஹர்டிக் பாண்டியாவும், மார்க் பவுச்சரும் நேற்று செய்தியாளர்களை சந்திபில் நடந்து கொண்டதை பார்க்கும் போது தெரிய வருகிறது என ரசிகர்கள் வலைதளத்தில் பேசி வருகிறார்கள்.

நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஹர்டிக் பாண்டியாவிடம் பத்திரிகையாளர் ஒருவர், ஒப்பந்தத்திலேயே ஹர்டிக் பாண்டியா கேப்டனாக தான் மும்பை அணிக்கு வருவேன் என்று கூறியதாக ரசிகர்கள் பேசி வருவதை குறித்து என்ன நினைக்கீறீர்கள் என்று கேட்ட போது இருவரும் அமைதியாக இருந்தனர்.

Read More :- IPL 2024 : ‘ சிஎஸ்கே அணியில் இதுதான் குறை ‘ – ஆகாஷ் சோப்ரா ! 

மேலும், ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பாண்டியா கேப்டனாக நியமிப்பதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கும் பாண்டியா மற்றும் மார்க் பவுச்சர் இருவருமே எந்த வித பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்தனர். இந்த குறிப்பிட்ட வீடியோவானது சமூக வலைத்தளத்தில் பரவி வருவதோடு ஹர்டிக் பாண்டியாவையும் மும்பை அணி ரசிகர்கள் X தளத்தில் கிண்டல் செய்தும், RIPHARDIKPANDIYA என ஹாஸ்டேக் (Hastag) உருவாக்கி அவரை திட்டியும் வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow