வங்கிகளுக்கு எச்சரிக்கை …!எஸ்.எம்.எஸ்.களுக்கு பயன்பாட்டுக்கான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் …!

வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள்  அனுப்பும் எஸ்.எம்.எஸ்.களுக்கு பயன்பாட்டுக்கான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரிவர்த்தனைகள் தொடர்பாக வங்கிகள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.களுக்கான கட்டணம் வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றும்  ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதனை பல வங்கிகள் முறையாகக் கடைபிடித்தாலும், எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் ரிசர்வ் வங்கி விதிகளை மீறி செயல்படுவதாக வங்கி விதிகள் மற்றும் தர வாரியமான பி.சி.எஸ்.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. அந்தந்த வாடிக்கையாளருக்கு அவரவர் பயன்பாட்டுக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள … Read more

தமிழகம் முழுவதும் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி…!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், இப்பிரச்சனையில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் நிலைபாட்டினை எதிர்த்தும், தமிழகத்திலுள்ள அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து விடுத்த அறைகூவலை ஏற்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டம் மக்கள் பேராதாரவுடன் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றுள்ளது. சென்னை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் ரயில், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை 2 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. அதுபோல் திருவாரூர் மாவட்டத்தில் ரயில் … Read more

ரிசர்வ் வங்கி அதிரடி …!பிட்காயின் சேவைக்கு தடை…!

ரிசர்வ் வங்கி பிட்காயின் எனப்படும் மெய்நிகர் நாணயப் பரிமாற்ற சேவையை எந்த வங்கிகளும் அளிக்கக் கூடாது என  உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 2018 – 2019 நிதியாண்டுக்கான கொள்கை அறிக்கையில் அறிவுறுத்தி உள்ள ரிசர்வ் வங்கி, தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உட்பட யாருக்கும் பிட்காயின் பரிவர்த்தனை சேவையை வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே பிட்காயின் பரிவர்த்தனை தொடர்புகள் இருப்பின், அவற்றை மூன்று மாதங்களுக்குள் துண்டித்துக் கொள்ள வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. … Read more

தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்காவில் உள்ள ஸ்டெர்லைட் விளம்பரங்களை தார் பூசி அழித்த வழக்கறிஞர்கள் …!

ஸ்டெர்லைட் ஆலை சார்பில்  தூத்துக்குடி  பகுதிகளில் செய்யப்பட்ட சமூகப் பணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள போர்டுகளில் வழக்கறிஞர்கள் தார் பூசி மறைத்தனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு … Read more

இந்திய பயனர்கள் 5.6 லட்சம் பேரின் தகவல்கள் ஃபேஸ்புக் மூலம் பகிர்வு ?

ஃபேஸ்புக் ஐந்தரை லட்சம் இந்தியர்களின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திடம் பகிரப்பட்டு இருக்கலாம் என  கூறியுள்ளது. பிரிட்டனில் இயங்கும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம், ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை முறைகேடாகப் பெற்று தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஃபேஸ்புக்கிடம் மத்திய அரசு சில கேள்விகளை கேட்டிருந்தது. இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்கள் பகிரப்பட்டதா? தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டதா? என்று கேட்டிருந்தது. இதற்கு விளக்கம் அளித்த ஃபேஸ்புக், 5 லட்சத்து 62 ஆயிரம் பயனர்களின் தகவல்கள் பகிரப்பட்டிருப்பதாக … Read more

சினிமாவில் படுக்கைக்கு அனுப்பும் விவகாரம் …!அந்த விஷயத்தில் இயக்குனருக்கு சவால் விடும் ஆபாச லீக் நடிகை ….!

பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவதுடன் படுக்கைக்கும் அழைப்பவர்கள் திரைப்படத்துறையில் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி ஆதாரப்பூர்வமாக வெளியிடுவேன் என்று டோலிவுட் நடிகை ஸ்ரீரெட்டி தனது இணையதள பக்கத்தில் புகார் கூறியிருந்தார். ஆனால் யாருடைய பெயரையும் அதில் குறிப்பிடவில்லை. இந்நிலையில் டோலிவுட் இயக்குனர் சேகர் கம்முலாவை பற்றித்தான் ஸ்ரீரெட்டி குறிப்பிடுகிறார் என இணைய தளத்தில் தகவல் பரவியது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சேகர் கம்முலா,’நடிகைக்கு எச்சரிக்கை விடுத்தார். தன்னை குறிப்பிடுவதுபோல் எழுதியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என … Read more

மத்திய அரசு காவிரி விவகாரத்தில் தமிழக அரசை கண்டு பயப்படவேண்டாம் …!

கர்நாடக முதல்வர் சித்தராமையா  தமிழகத்தின் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணியக்கூடாது என்று தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணியக்கூடாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி விழாவில் … Read more

பெல்ஜியம் அரசு நீரவ் மோடியின் 2 வங்கிக் கணக்குகளை முடக்கியது …!

பெல்ஜியம் அரசு  பஞ்சாப் நேசனல் வங்கி நிதிமோசடி வழக்கில் தொடர்புடைய வைர வணிகர் நீரவ் மோடியின் 2 வங்கிக் கணக்குகளைப் முடக்கியுள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியின் உத்தரவாதக் கடிதத்தின் மூலம் பல்வேறு வங்கிகளில் 11ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் கடன்பெற்றுத் திருப்பிச் செலுத்தாத வைர வணிகர்கள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். இந்தியாவில் அவர்களின் நிறுவனங்களிலும் வீடுகளிலும் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன் ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைப் … Read more

இவரு 5வருட சிறைக்கு சென்றாரா?இல்ல ஷூட்டிங் போனாரா ?சிறையில் தெனாவட்டாக இருக்கும் சல்மான் …!

  5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 2 மான்களை சுட்டுக்கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. ராஜஸ்தான் மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்து அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியது.   ஜோத்புர் நீதிமன்றம் Hum saath saath hai படப்பிடிப்பின் போது காட்டில் இரண்டு கலைமான்களை வேட்டையாடியதாக நடிகர்கள் சல்மான்கான், சைப் … Read more

நெல்லையில் காவிரி வாரிய போராட்டத்தின் போது ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர்…!

காவிரி வாரிய போராட்டத்தின் போது ஓடும் பேருந்தில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்தார் . இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு போராட்டத்தில் குதித்துள்ளது. … Read more