அமமுக பொருளாளர் ஆர்.மனோகரன் அதிமுகவில் இணைந்தார்..!

Apr 23, 2023 - 05:45
 0  1

அமமுக பொருளாளர் ஆர்.மனோகரன் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது, இதையடுத்த பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக பாஜக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது அமமுக பொருளாளரும், திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளருமான ஆர்.மனோகரன் கட்சியில் இருந்து விலகி சற்று நேரத்திலேயே சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.

முன்னதாக, தஞ்சை தெற்கு மாவட்ட முன்னாள் அமமுக செயலாளர் சேகர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சேகர் அவர்களுடன் ஒரத்தநாடு அமமுக ஒன்றிய செயலாளர்கள் ஆசைதம்பி மற்றும் ராஜேஷ் அவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow